enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  என் காதல் தேவி English | tamil | To Print
பாடல் தலைப்பு என் காதல் தேவி    திரைப்படம் ராகங்கள் மாறுவதில்லை 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி அம்பிகா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் அவினாசி மணி  
இயக்குநர் சிறுமுகை ரவி   ராகம்  
வெளியானஆண்டு 1983  தயாரிப்பு வாசன் புரொடக்சன்ஸ் 

டர ராரா... டர டாரா ராரா டா...
டர ராரா... டர ராரரூரூ...

இசை பல்லவி

டர ராரா டர ராரா டர ராரா டர ராரா
டர ராரா டர ராரா ரா ரரரர

என் காதல் தேவி நீ என்னில் பாதி
என் காதல் தேவி நீ என்னில் பாதி
இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே
இது காம தேவன் காதல் யாகமே

என் காதல் தேவி நீ என்னில் பாதி
என் காதல் தேவி நீ என்னில் பாதி

இசை சரணம் - 1

ஹே பாவை உந்தன் பார்வை கணை பாய
நாளை மனம் சொர்கம் தன்னில் சாய
பாவை உந்தன் பார்வை கணை பாய
நாளை மனம் சொர்கம் தன்னில் சாய
பகல் ஏது இரவேது உனை எண்ணும் போது
பல வேறு நினைவோடு பசிக்கின்ற போது
மார்போடு சேரும் கார்காலம்
அழகே என் அருகே நீ வேண்டும்

என் காதல் தேவி நீ என்னில் பாதி
இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே
இது காம தேவன் காதல் யாகமே

என் காதல் தேவி நீ என்னில் பாதி ( இசை )

டூரு ரூருரூரு ருரு ருரு ருரு ருரு
டூரு ரூருரூரு தரத் தரத்தா
டூரு ரூருரூரு தரத் தரத் தரத் தர
டூரு ரூருரூரு தரத் தரத்தா

இசை சரணம் - 2

கோபம் என்ன வேகம் என்ன கண்ணே
தோகை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே
கோபம் என்ன வேகம் என்ன கண்ணே
தோகை உன்னை காதல் கொண்டேன் பெண்ணே
குளிர் காலம் தெரியாமல் பரிமாறு முன்னே
உனைச் சேரும் தேவன் நான் தானே பொன்னே
நீ இல்லை என்றால் வீண் தானே
தருவாய் உன் திருவாய் செந்தேனே

என் காதல் தேவி நீ என்னில் பாதி
இளம் பூவின் தேகமே அலை பொங்கும் மோகமே
இது காம தேவன் காதல் யாகமே

தரத் தாரத் தர   தர தரத் தரத் தரத் தரா
தர தானா னானா தர தானா னானா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1