enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  பக்கத்துல நீ இருந்தும் English | tamil | To Print
பாடல் தலைப்பு பக்கத்துல நீ இருந்தும்    திரைப்படம் சின்ன துரை 
கதாநாயகன் சரத்குமார்  கதாநாயகி சித்தாரா / ரோஜா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் தேவி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பழனி பாரதி  
இயக்குநர் ஆர். சந்திரா   ராகம்  
வெளியானஆண்டு 1999  தயாரிப்பு கே. பாலு 

பல்லவி

பெண் பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான் இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே
கையில் உள்ள வைரம் தன்ன
கண்டு கொள்ள நான் மறந்தேன்
சின்னஞ்சிறு கிளியே
பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு சொல்லாம ஆறாது

பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான் இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே

ஆண் பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே
உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத் தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே
பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு சொல்லாம ஆறாது

பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே

இசை சரணம் - 1

பெண் கண்ணு தெறந்திருந்தது
மனசு மட்டும் ஏனோ அடச்சிருந்தது
அழுவதா சிரிப்பதா அம்மாடி

ஆண் நானா விரும்பவில்லையே
நடந்ததையும் ஏனோ தடுக்கவில்லையே
நடப்பதே நடக்குமே அம்மாடி

பெண் பூந்தென்றலே... 
தேவை இல்லா வேலிகள் உண்டாக
யார் காரணம்
பூ முல்லையே...
மிச்சத்தைக் காலங்கள் தான் கூறணும்

ஆண் நான் நடக்கும் பாதையில் யார் நடப்பா
ஊர் பாரம் என் மீது
என் வீட்டு பாரத்தை யார் சுமப்பா

பார்வையிலே குத்தமுன்னா
பார்ப்பதெல்லாம் குத்தமடி
சின்னஞ்சிறு கிளியே

இசை சரணம் - 2

ஆண் முன்னால் விழுந்த முடிச்சு
அவிழ்த்த கிளி எங்கோ பறந்து சென்றது
கெடச்சது நீயடி பூங்கிளியே

பெண் தன்னால் விழுந்த முடிச்சு
என்னை எடுத்து இங்கே எணச்சு வெச்சது
இருப்பதே நீயடி பூங்கிளியே

ஆண் வாழ்க்கை தரும்...
வாழ்க்கை தரும் பாடங்கள் 
வேறெங்கும் கிடைக்காதம்மா
விட்டு விட்டால்
போகின்ற நேரங்கள் திரும்பாதம்மா

பெண் கண்டெடுத்த முத்தான முத்து மணி
நான் இன்று வேறல்ல
என் வார்த்தை பொய் அல்ல நீ அறிவாய்

பக்கத்துல நீ இருந்தும்
தூரமுன்னு நான் இருந்தேன்
சின்னஞ்சிறு கிளியே

ஆண் உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத் தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே

பெண் பத பதைக்கும் நெஞ்சுக்குள்ள
கதை இருக்கு நீ கேளு சொல்லாம ஆறாது

ஆண் சொல்ல வந்த சேதிகள
சொல்ல வந்த நேரம் இது
சின்னஞ்சிறு கிளியே
உள்ள படி சொல்லப் போனா
உண்மைக்குத் தான் காலம் இன்று
சின்னஞ்சிறு கிளியே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1