enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆகாய வெண்ணிலாவே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆகாய வெண்ணிலாவே    திரைப்படம் அரங்கேற்ற வேளை 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி ரேவதி 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள் உமா ரமணன் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ஃபாசில்   ராகம்  
வெளியானஆண்டு 1990  தயாரிப்பு சுனிதா புரொடக்சன்ஸ் 

ஆண் ஆகாய வெண்ணிலாவே 
தரை மீது வந்ததேனோ ( இசை )

பெண் அழகான ஆடை சூடி 
அரங்கேறும் வேளை தானோ

இசை பல்லவி

ஆண் ஆகாய வெண்ணிலாவே 
தரை மீது வந்ததேனோ 

பெண் அழகான ஆடை சூடி 
அரங்கேறும் வேளை தானோ 

ஆண் மலர் சூடும் கூந்தலே
மழைக் கால மேகமாய் கூட

பெண் உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் ஆகாய வெண்ணிலாவே 
தரை மீது வந்ததேனோ 

பெண் அழகான ஆடை சூடி 
அரங்கேறும் வேளை தானோ 

இசை சரணம் -1

ஆண் தேவார சந்தம் கொண்டு
தினம் பாடும் தென்றல் ஒன்று
பூவாரம் சூடிக் கொண்டு
தலை வாசல் வந்ததின்று

பெண் தென் பாண்டி மன்னன் இன்று
திருமேனி வண்ணம் கொண்டு
மடியேறி வாழும் பெண்மை
படியேறி வந்ததின்று

ஆண் இள நீரும் பாலும் தேனும்
இதழோரம் வாங்க வேண்டும்

பெண் கொடுத்தாலும் காதல் தாபம்
குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண் கடல் போன்ற ஆசையில்
மடல் வாழை மேனி தான் ஆட

பெண் நடு ஜாம வேளையில் 
நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண் ஆகாய வெண்ணிலாவே 
தரை மீது வந்ததேனோ 

பெண் அழகான ஆடை சூடி 
அரங்கேறும் வேளை தானோ 

ஆண் மலர் சூடும் கூந்தலே
மழைக் கால மேகமாய் கூட

பெண் உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண் ஆகாய வெண்ணிலாவே 
தரை மீது வந்ததேனோ 

பெண் அழகான ஆடை சூடி 
அரங்கேறும் வேளை தானோ 

இசை சரணம் - 2

பெண் தேவாதி தேவர் கூட்டம்
துதி பாடும் தேவ ரூபம்
பாதாதி கேசம் எங்கும்
ஒளி வீசும் கோயில் தீபம்

ஆண் வாடாத பாரிஜாதம்
நடை போடும் வண்ணப் பாதம்
கேளாத வேணு கானம்
கிளிப் பேச்சில் கேட்கக் கூடும்

பெண் அடியாளின் ஜீவன் மேவி
அதிகாரம் செய்வதென்ன

ஆண் அலங்கார தேவ தேவி
அவதாரம் செய்ததென்ன

பெண் இசை வீணை வாடுதோ
இதமான கைகளே மீட்ட

ஆண் சுதியோடு சேருமோ
சுகமான ராகமே காட்ட

பெண் ஆகாய வெண்ணிலாவே 
தரை மீது வந்ததேனோ 

ஆண் அழகான ஆடை சூடி 
அரங்கேறும் வேளை தானோ 

பெண் மலர் சூடும் கூந்தலே
மழைக் கால மேகமாய் கூட

ஆண் உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

பெண் ஆகாய வெண்ணிலாவே 
தரை மீது வந்ததேனோ 

ஆண் அழகான ஆடை சூடி 
அரங்கேறும் வேளை தானோ 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1