enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆதார சுருதி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆதார சுருதி    திரைப்படம் கொஞ்சி பேசலாம் 
கதாநாயகன் வம்சி  கதாநாயகி ஸ்ரீஜா 
பாடகர்கள் கார்த்திக்  பாடகிகள் சாதனா சர்கம் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ஆர். காளீஸ்வரன்   ராகம்  
வெளியானஆண்டு 2003  தயாரிப்பு ஸ்டேன்லி ராஜன் 

இசை பல்லவி

ஆண் ஆதார சுருதி இல்லாத ராகம் ஏது
அடடா உன் கண்கள்
பாடாத கானம் ஏது ( இசை )

ஆதார சுருதி இல்லாத ராகம் ஏது
அடடா உன் கண்கள் பாடாத கானம் ஏது
காதல் எனும் அதிசயம் மனம் பறந்து போச்சு
என் இதயம் என்னையே இங்கு மறந்து போச்சு
வா வா என் வான் குயிலே
வழி எங்கும் வசந்தங்களே
தேன் ஊறும் பூவினிலே
தினம் தோறும் விருந்துகளே

பெண் ஆதார சுருதி இல்லாத ராகம் ஏது
அழகே உன் கண்கள் பாடாத கானம் ஏது

இசை சரணம் - 1

ஆண் வைகை வந்த தென்றல் காற்று
வட்டம் இட்டு உன்னை சுற்றும்
சுற்றுகின்ற பூமிப் பந்து
சற்று நின்று மேளம் கொட்டும்

பெண் உன்னைக் கண்டு கோயில் சிற்பம்
கண் திறந்து கையைத் தட்டும்
கல்வி தந்த வீணைக்கெல்லாம்
கை குவித்து கப்பம் கட்டும்

ஆண் மெட்டு ஒன்று என் உள்ளத்தில்
மொட்டு விட்டிடாதோ

பெண் சிட்டு ஒன்று உந்தன் பாடல்
ஒட்டு கேட்டிடாதோ

ஆண் பூங்காற்றே...
பூங்காற்றே என்னை தீண்டாமல்
எங்கும் போகாதே நெஞ்சம் தாங்காதே

பெண் ஆதார சுருதி இல்லாத ராகம் ஏது
அழகே உன் கண்கள் பாடாத கானம் ஏது

இசை சரணம் - 2

பெண் கண்கள் உன்னைக் காணும் முன்னே
எந்தன் நெஞ்சில் யாரும் இல்லை
இன்று எந்தன் நெஞ்சுக்குள்ளே
உன்னை அன்றி யாரும் இல்லை

ஆண் வண்ண வண்ணப் பூவே உன்னை
வாழ்த்திப் பாட வார்த்தை இல்லை
சொல்லி சொல்லி நோகும் எந்தன்
உள்ளம் உந்தன் செல்லப் பிள்ளை

பெண் காலை மாலை நாட்களாய்
காலம் இங்கு மாறும்

ஆண் காலம் நேரம் மாறும் அன்பே
காதல் என்றும் வாழும்

பெண் மாறாது...
மாறாது மனம் மாறாது
நீயும் இல்லாமல் எந்தன் வாழ்வேது

ஆதார சுருதி இல்லாத ராகம் ஏது
அழகே உன் கண்கள் பாடாத கானம் ஏது
காதல் எனும் அதிசயம் மனம் பறந்து போச்சு
என் இதயம் என்னையே இங்கு மறந்து போச்சு

ஆண் வா வா என் வான் குயிலே
வழி எங்கும் வசந்தங்களே

பெண் தேன் ஊறும் பூவினிலே
தினம் தோறும் விருந்துகளே

ஆண் ஆதார சுருதி இல்லாத ராகம் ஏது

பெண் அழகே உன் கண்கள் பாடாத கானம் ஏது

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1