enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  நில்லாத வெண்ணிலா English | tamil | To Print
பாடல் தலைப்பு நில்லாத வெண்ணிலா    திரைப்படம் ஆணழகன் 
கதாநாயகன் பிரசாந்த்  கதாநாயகி சுநேஹா 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள் சுவர்ணலதா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் தியாகராஜன்   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு சுப்ரீம் ஃபிலிம்ஸ் இன்டர் நேஷனல் 

இசை பல்லவி

ஆண் நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி
நில்லாமலே நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

பெண் நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்

இசை சரணம் - 1

ஆண் மான் துள்ளும் மலையாளத்தின் 
எழில் சித்திரமே சித்திரமே
வாழையும் இளநீரையும் கொண்ட
நன்நிலமே நன்நிலமே

பெண் கேரளக் குயில் கூவிடும் 
மெட்டு தித்தித்ததோ தித்தித்ததோ
ஆவணித் திருவோணத்தில்
உன்னை சந்தித்ததோ சந்தித்ததோ

ஆண் பொன்னல்லோ சிறு பூவல்லோ
மெல்லத் தொடவோ என்னைத் தரவோ

பெண் தேனல்லோ பசும் பாலல்லோ
பக்கம் வரவோ நான் தரவோ

ஆண் செம்மீன்கள் துள்ளுதே 
இங்கும் அங்கும் கண் ஓடையில்

பெண் சந்தோஷம் பொங்குதே
முன்னும் பின்னும் உன் கூடலில்
நான் சொல்லவோ சின்னப் பூ அல்லவோ

ஆண் நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி

பெண் நில்லாமலே நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

ஆண் நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் காதலி
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் கண் வழி

இசை சரணம் - 2

பெண் நீ வர எதிர் பார்த்தது 
இந்த நந்தவனம் நந்தவனம்
நீ தொட இங்கு பூத்தது
இந்த செங்கமலம் செங்கமலம்

ஆண் காமனின் கலை காண்பது
இந்த அந்தப்புரம் அந்தப்புரம்
பூ மரக் குயில் கூவுது
இங்கு சப்தஸ்வரம் சப்தஸ்வரம்

பெண் மஞ்ச மேனி தான் நெஞ்சமே சுகம்
பஞ்சமோ இங்கு கொஞ்சமோ

ஆண் உள்ளமே இன்ப வெள்ளமே
உன்னை அள்ளவோ அள்ளிச் செல்லவோ

பெண் அன்றாடம் சேர்வது
மன்னா மன்னா உன் பொன் மடி

ஆண் எந்நாளும் இன்பமே நீயே நீயே என் பைங்கிளி
பூ மங்கையே பொங்கிடும் கங்கையே

பெண் நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்

ஆண் நில்லாமலே நீ போவதேன்
சொல்லாமலே நான் நோவதேன் ஏன்

பெண் நில்லாத வெண்ணிலா
நில்லு நில்லு என் வாசலில்
சொல்லாத பொன் மொழி
சொல்லு சொல்லு உன் பார்வையில்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1