enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கார்மேகம் ஊர்கோலம் போகும் English | tamil | To Print
பாடல் தலைப்பு கார்மேகம் ஊர்கோலம் போகும்    திரைப்படம் காலமெல்லாம் உன் மடியில் 
கதாநாயகன் முரளி  கதாநாயகி ஜெயஸ்ரீ 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் சந்திர போஸ்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் ராஜசேகர்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு திருப்பூர் மணி 

பெண் ஆ... ஆ...   ஆ... ஆ... ஆ... 

இசை பல்லவி

பெண் கார்மேகம் ஊர்கோலம் போகும் 
காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

பெண் மாலையில் நீ வந்து மாலை சூட

ஆண் மாலையில் நீ வந்து மாலை சூட

பெண் மை விழி ஆனந்த காவியம் பாட

கார்மேகம் ஊர்கோலம் போகும் 
காதலின் தூதாக உனை வந்து தேடும் ( இசை )

ஸரிமா ஸநிதா கரிநீ ரிரிஸா...

இசை சரணம் – 1 

ஆண் தேவதை உந்தன் வழியினிலே
செந்நிற ரோஜா மலர் விரிப்பேன் ( இசை )

பெண் ஆ... ஆ... 
வானகம் எந்தன் அருகினிலே
வந்தது போலே மகிழ்ந்திருப்பேன்

ஆண் மண் மீது மேவாமல் பாதம் படும்
மண் மீது மேவாமல் பாதம் படும்

பெண் மங்கள கல்யாண நாதம் வரும்

ஆண் கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

பெண் மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட

ஆண் மை விழி ஆனந்த காவியம் பாட

பெண் கார்மேகம் ஊர்கோலம் போகும் ( ம்... )
காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் ஹா... ஆ...

இசை சரணம் – 2

பெண் ஆயிரம் ஜென்மம் தொடர்ந்து வரும்
அனைத்திலும் உந்தன்உறவு வரும் ( இசை )

ஆண் ஆ... ஆ...
என் உயிர் உந்தன் வடிவில் வரும்
இரவினில் ஸ்வர்கம் மடியில் விழும்

பெண் என் காதல் ராஜாங்க வீதியிலே
என் காதல் ராஜாங்க வீதியிலே

ஆண் ஊர்வலம் நாம் போக வா மயிலே

பெண் கார்மேகம் ஊர்கோலம் போகும் 
காதலின் தூதாக உனை வந்து தேடும்
கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்

ஆண் மாலையில் நீ வந்து மாலை சூட
மாலையில் நீ வந்து மாலை சூட

பெண் மை விழி ஆனந்த காவியம் பாட

இருவர் கார்மேகம் ஊர்கோலம் போகும்
காதலின் தூதாக உனை வந்து தேடும்
Typed By : Jayanthi Seshadri

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1