enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உசுரே உசுரே English | tamil | To Print
பாடல் தலைப்பு உசுரே உசுரே    திரைப்படம் கருப்பன் 
கதாநாயகன் விஜய் சேதுபதி  கதாநாயகி பாபி சிம்ஹா 
பாடகர்கள்   பாடகிகள் அனன்யா 
இசையமைப்பாளர் டி.இமான்   பாடலாசிரியர்கள் யுகபாரதி  
இயக்குநர் ஆர். பன்னீர்செல்வம்   ராகம்  
வெளியானஆண்டு 2017  தயாரிப்பு ஸ்ரீ சாய் ராம் கிரியேஷன்ஸ் 

இசை பல்லவி

உசுரே உசுரே நான் தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாத நான் பொழுதும் விழி நீருல
நனஞ்ச வெறகா கெடக்கேன்
திமிரும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் புழுவா இருக்கேன்
செலந்திக் கூடா செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நான்
ஆ... ஆ... ஆ... ஆ...  ஆ... ஆ... 

உசுரே உசுரே நான் தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

இசை சரணம் - 1

குழந்தைய போல மடியில போட்டே
தூங்காம நீ என்ன தாலாட்டுவே
மெது மெதுவா நான் ஒறங்கிடப் பாத்தா
தாயா நீ ஓங் கையால் சோறூட்டுவே
பசியே இல்லென்னு பல வாட்டி சொல்ல
ஒழுங்கா தின்னுன்னு கொணம் காட்டுவே
பொடவ பொட்டுன்னு எதையும் கேக்காம
புடி டா அன்புன்னு பொறை ஏத்துவே
கொலசாமி தந்திட்ட பூவ 
வணங்காம வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நான் ஆவ நீ தான் தேவ

உசுரே உசுரே நான் தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

இசை சரணம் - 2

இடி விழுந்தாலும் சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூச் சூடல
விடிஞ்ச பின்னாலும் ஒறங்குற ஆளு
சேதாரம் நீ செய்யக் கண் மூடல
ஒன நான் நெஞ்சுக்குள் அட காத்து வெச்சேன்
அத நீ பொய்யின்னா மனம் தாங்கல
ஒலகே கண் வைக்க உறவான ஒன்ன
ஒதுங்க என்னைக்கும் இவ ஏங்கல
விதியால சம்பங்கி மால
வெளங்காம இன்னைக்கு கீழ
விழுந்தேனே ஏனோ பாவம் போல

உசுரே உசுரே நான் தானே
முழுசா ஒடஞ்சே போனேனே
அழவே தெரியாத நான் பொழுதும் விழி நீருல
நனஞ்ச வெறகா கெடக்கேன்
திமிரும் புலி வாலையும் புடிக்கும் ஒரு ஆம்பள
பொலம்பும் புழுவா இருக்கேன்
செலந்திக் கூடா செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே வலியோட நான்

உசுரே... உசுரே...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1