enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆத்தங்கரையில் ஒரு ரோசா English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆத்தங்கரையில் ஒரு ரோசா    திரைப்படம் ஒரே முத்தம் 
கதாநாயகன் ஜெய் கணேஷ்  கதாநாயகி சுமித்ரா 
பாடகர்கள் ஜெயச்சந்திரன்  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் சி. ஏ. முகிலன்   ராகம்  
வெளியானஆண்டு 1980  தயாரிப்பு எஸ். வி. எஸ் / ஏ. வி. எம். சினி கம்பைன்ஸ் 

பெ குழு ஹேய்.... 

ஆ குழு ஹா ஹேய் ஹா ஹூ ஹா ஹூ ஹேய்

இசை பல்லவி

ஆண் ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு ( இசை )

கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு
என்னைப் பார்த்து ரசிக்கச் சொல்லிச்சு

குழு ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு

இசை சரணம் – 1

ஆண் பூவைப் பறிச்சேன் பொன்னாக நினைச்சேன்
பூப் போல நான் அணைச்சேன்
வாசமோ என்னை வாட்டுது 
ஒரு வண்டாட்டம் நான் தவிச்சேன்
நல்ல சந்தனத்துக் காலெடுத்து 
என்னருகில் நடக்கையில்
எண்ணி எண்ணி நான் துடிச்சேன் 
நான் தெனம் தெனம் தூக்கத்தை மறந்தாச்சு 
மனம் உன் நெனப்பில் கலந்தாச்சு

குழு ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

இசை சரணம் – 2

பெண் ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனப்பு 
ஆறாத கதகதப்பு 
ஆறுமோ மனம் தேறுமோ 
இது ஆறாட்டி உன் பொறுப்பு
சின்னக் கன்னி மனம் பிஞ்சு மனம் 
கொஞ்சி வந்து சிரிக்கிது என்ன இது உன் ரசிப்பு
நான் கனவில கண்ட சுகம் பலிச்சாச்சு
அது நெஜமுன்னு தெரிஞ்சாச்சு

ஆத்தங்கரையில் ஒரு ராசா சின்ன ராசா
வந்து கண்ணச் சிமிட்டி நின்னுச்சு
கொஞ்சம் கையப் புடிக்கச் சொல்லிச்சு
என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு

ஆ குழு தனனனா

பெ குழு  தந்தானாத் தானத் தந்தனனான தந்தனனான 
தந்தத் தந்தன்னா

ஆ குழு தந்தானத் தனனனா

பெ குழு தந்தானாத் தாரத் தருதந்தான தருதந்தான 
தந்தத் தந்தன்னா

இசை சரணம் – 3

ஆண் ஆசை மனசு அம்மாடி புதுசு ஆளான இளம் வயசு

பெண் ஆடுது தினம் பாடுது நிறம் வாடாத புது சொகுசு

ஆண் முத்துப் பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு 
மயக்குது கட்டழகுச் சிறு வயசு

பெண் நீ மெல்ல மெல்லப் புன்னகையில் 
கன்னி மனம் பொறுக்காதே

ஆ குழு ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு

பெ குழு கொஞ்சம் கையப் புடிக்க சொல்லிச்சு
என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு

குழு தந்தானத் தான தந்தன்னா னா
தந்தன்னா னா
தானா தானானத் தந்தன்னா னா
தானா தானானத் தந்தன்னா னா
Typed By : Jayanthi Seshadri

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1