enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கண்ணன் அருகே பாட English | tamil | To Print
பாடல் தலைப்பு கண்ணன் அருகே பாட    திரைப்படம் கண்ணன் ஒரு கை குழந்தை 
கதாநாயகன் சிவகுமார்  கதாநாயகி சுமித்ரா 
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள் வாணி ஜெய்ராம் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் என். வெங்கடேஷ்   ராகம்  
வெளியானஆண்டு 1978  தயாரிப்பு விவேகானந்தா பிக்சர்ஸ் 

இசை பல்லவி

கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும் 
இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள் 
உனக்கென்ன புரியலையா

கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும் 
இதோ இங்கே
அழகிய விழிகளில் எழுதிய கவிதைகள் 
உனக்கென்ன புரியலையா

இசை சரணம் - 1

ஒரு மோக மந்திரம் பாட வந்ததன் 
பார்வை வேறெங்கே
புது ராக மாலிகை போல வந்தவள் 
என்னைப் பார் இங்கே
இளம் பாவை என் மனம் உன்னிடம்
இனி தேவை மன்னவன் சம்மதம்
பெண் மேனியோ பொன் வீணையோ
என்னென்ன தான் சங்கீதமோ
ஆனந்த ராகம் இன்று பாடக் கூடாதோ

கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும் 
பாபாப பாபா... பாபாப பாபா...
பாபாப பாபா... பாபாப பாபா...

இசை சரணம் - 2

ஒரு ஆணுக்கென்னடி நாணம் இப்படி 
பார்த்துச் சொல்லாயோ
இனி அஞ்சும் மோகனம் இன்னும் ஏனடி 
கேட்டுச் சொல்லாயோ
இரு ஆடை தொட்டது மெல்லென
பெரும் ஆசை தொட்டது சில்லென
கூடாமலே நீ கூடலாம் தேமாங்கனி நீ தேடலாம்
அம்மாடி இன்னும் என்ன மௌனம் என்னோடு

கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும் 

இசை சரணம் - 3

இரு கையில் ஆடவும் மையல் தேடவும் 
தூது வந்தேனே
மலர் கண்ணில் அஞ்சனம் சொல்லில் அஞ்சுகம் 
ஏந்தி நின்றேனே
ஒரு காவல் வேலியைத் தாண்டலாம்
புது நாவல் மேனியைத் தீண்டலாம்
துள்ளும் விழி செந்தாமரை
பிள்ளை மனம் வெண் தாமரை
சாமந்திப் பூவும் போர்வையாக ஆகக் கூடாதோ

கண்ணன் அருகே பாட வேண்டும்
காதல் கிளி நான் ஆட வேண்டும் 
இதோ இங்கே...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1