enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உண்மைக்கே பிறப்பெடுத்தேன் English | tamil | To Print
பாடல் தலைப்பு உண்மைக்கே பிறப்பெடுத்தேன்    திரைப்படம் துணை இருப்பாள் மீனாட்சி 
கதாநாயகன் சிவகுமார்  கதாநாயகி சுஜாதா 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன்  பாடகிகள் பூர்ணிமா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் பஞ்சு அருணாச்சலம்  
இயக்குநர் வலம்புரி சோமநாதன்   ராகம்  
வெளியானஆண்டு 1977  தயாரிப்பு எஸ். பி. வி. ஃபிலிம்ஸ் 

( தொகையறா )

ஆண் உண்மைக்கே பிறப்பெடுத்தேன்
உண்மைக்கே வாழ்ந்திருந்தேன்
உண்மை சொல்லி அரசிழந்தேன்
உண்மையினால் தெருவில் வந்தேன்... 
ஏ... ஏ...   ஏ... ஏ... ஏ... தெருவில் வந்தேன் 

இசை பாடல்

ஆண் சத்திய சோதனை எத்தனையாயினும் 
சகிப்பவன் தானே சத்தியவான் 
சத்திய சோதனை எத்தனையாயினும் 
சகிப்பவன் தானே சத்தியவான் 
பட்ட கடன்களை எப்படியாவது 
கொடுப்பவன் தானே புண்ணியவான் 
கொண்டதை எல்லாம் கொடுத்து விட்டேன் 
இனி கொடுப்பதற்கோர் சல்லி கையில் இல்லை
இல்லை என்றால் அவன் விடுவானா 
கடன் பட்டவன் கண்ணீர் வெளியாமோ ( இசை )

கருணை உள்ளோரே பெரியவரே 
நான் கட்டிய மனைவியை விற்க வந்தேன்
சத்திய சோதனை எத்தனையாயினும் 
சகிப்பவன் தானே சத்தியவான் 

( வசனம் )

ஆண் ஐயா
நான் தொட்டுத் தாலி கட்டிய 
என் மனைவியாகப்பட்ட சந்திரமதியை 
என் துன்பத்தின் நிமித்தம் தங்கள் முன் 
விலை கூறி விற்கிறேன் ஐயா

குழு என்னப்பா விந்தை இது 
அட என்னப்பா விந்தை இது 
மனைவியையே விற்க்கின்றாயே
பாவமென பணம் கொடுத்து நான் வாங்குவதால் 
நன்மை என்ன நன்மை என்ன...

இசை பாடல்

ஆண் காலை எழுந்திருந்து மாடு மனை சுத்தம் செய்வாள்
வாசலில் நீர்த் தெளித்து மாக்கோலம் போட்டிடுவாள்
தண்ணீர் எடுத்து வைப்பாள் தோட்டம் திருத்தி வைப்பாள்
அறு சுவையும் சமைத்து வைப்பாள் 
அன்னை என காவல் நிற்பாள்
நல்ல வேலைக்காரருக்கு என்ன என்ன பணிகளென்று
சாத்திரங்கள் சொன்ன படி நாள் முழுதும் பணி புரிவாள்

குழு இதனுள்ளே வேண்டிய பொன் 
இருக்கிறது எடுத்துக் கொள்வாய்
இப்பொழுதே அடிமை தனை 
என்னுடன் அனுப்பி வைப்பாய்

( வசனம் )

 ஆண் என் அன்புக்குரிய மனைவியே 
என் அருமைக் குழந்தையே
உங்களை எல்லாம் நான் 
விட்டுப் பிரிய வேண்டிய தருணம் வந்து விட்டது

இசை பாடல்

ஆண் சென்று வா என் உத்தமியே சென்று வா 
சென்று வா என் உத்தமியே சென்று வா 
வல்வினையால் முன் ஜென்ம செய்வினையால்
வல்வினையால் முன் ஜென்ம செய்வினையால்
உன்னை இங்கு விற்றேனே சென்று வா

மைந்தா நான் பெற்ற குல விளக்கே 
மார் மீதும் மடி மீதும் சீரோடும் சிறப்போடும்
வாழ்ந்ததெல்லாம் நினைக்காமல் 
மனம் கலங்கிப் போகாமல்
அன்னை அருகிருந்து அவள் பணிக்கு உதவிடுவாய்
சென்று வா... சென்று வா... சென்று வா...

பெண் கலங்காதே மன்னா கை பிடித்த நாயகரே
கலங்காதே மன்னா கை பிடித்த நாயகரே
கணவன் வார்த்தையினை 
காப்பவள் தான் பெண்ணரசி போய் வாரேன் 
உங்கள் புகழனைத்தும் காத்திருப்பேன் 
விடை கொடுங்கள் மன்னா
விதியினை யார் வெல்வாரோ 
விடை கொடுங்கள் மன்னா
விதியினை யார் வெல்வாரோ 
விதியினை யார் வெல்வாரோ 
விதியினை யார் வெல்வாரோ 
Typed By : Shyni

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1