enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆகாய தாமரை அருகில் வந்ததே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆகாய தாமரை அருகில் வந்ததே    திரைப்படம் நாடோடி பாட்டுக்காரன் 
கதாநாயகன் கார்த்திக்  கதாநாயகி மோஹினி 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் முத்துலிங்கம்  
இயக்குநர் என்.கே.விஸ்வநாதன்   ராகம்  
வெளியானஆண்டு 1992  தயாரிப்பு முருகன் சினி ஆர்ட்ஸ் 

இசை பல்லவி

ஆண் ஆகாயத் தாமரை அருகில் வந்ததே ( இசை )

நாடோடிப் பாடலில் உருகி நின்றதே ( இசை )

ஆகாயத் தாமரை அருகில் வந்ததே
நாடோடிப் பாடலில் உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே

பெண் ஆகாயத் தாமரை அருகில் வந்ததே
நாடோடிப் பாடலில் உருகி நின்றதே
காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே

ஆண் ஆகாயத் தாமரை அருகில் வந்ததே 

இசை சரணம் - 1

ஆண் மெல்லிசைப் பாட்டு முழங்கிடக் கேட்டு
இதயமே இளகுதா இள மயிலே

பெண் நீ மந்திரம் போலே மணித் தமிழாலே
இசைக்கிறாய் இழுக்கிறாய் இளவரசே

ஆண் ஒரு மடமாது இணை பிரியாது 
இருக்குமோ மறக்குமோ

பெண் ஒரு பொழுதேனும் அருவியை மீனும் 
பிரியுமோ விலகுமோ

ஆண் என்று இந்த லீலை எல்லாம் 
எல்லை தாண்டிப் போவது

பெண் கைகள் ஏந்தும் வேளை எல்லாம் 
கன்னிப் போகும் பூ இது

ஆண் முத்தம் தலைவன் இதழ் பதித்திட 
இதயம் தித்தித்திட புதிய மதுரசம் வழிந்திட

பெண் ஆகாயத் தாமரை அருகில் வந்ததே

ஆண் நாடோடிப் பாடலில் உருகி நின்றதே

இசை சரணம் - 2

ஆண் புன்னகை முல்லை புது விழிக் குவளை
அழகிய அதரங்கள் அரவிந்தப் பூவோ
உன் கன்னங்கள் ரோஜா கொடி இடை அல்லி
நிறத்தினில் நீ ஒரு செவ்வந்திப் பூவோ
செண்பகம் ஒன்று பெண் முகம் கொண்டு
எனக்கென பிறந்ததோ
குன்றினில் தோன்றும் குறிஞ்சியும் இங்கே
குமரியாய் விளைந்ததோ

பெண் மின்னும் வண்ணப் பூக்கள் எல்லாம்
மாலை என்று ஆகலாம்
மன்னன் தந்த மாலை எந்தன் 
நெஞ்சைத் தொட்டு ஆடலாம்
நெஞ்சைத் தழுவியது துலங்கிட உறவு விளங்கிட
இனிய கவிதைகள் புனைந்திட

ஆண் ஆகாயத் தாமரை அருகில் வந்ததே

பெண் நாடோடிப் பாடலில் உருகி நின்றதே

ஆண் காவல் தனை தாண்டியே காதல் துணை வேண்டியே

பெண் ஆகாயத் தாமரை அருகில் வந்ததே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1