enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அதோ அந்த நதியோரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு அதோ அந்த நதியோரம்    திரைப்படம் ஏழை ஜாதி 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி ஜெயப்ரதா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் லியாகத் அலி கான்   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு ஹேமலதா ரமேஷ் 

பெண் அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்...
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்...

இசை பல்லவி

பெண் அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

பெ குழு அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி

பெண் அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

ஆண் ஆஹா... ஆ... ஹா... ஆஹ ஆஹா... ஆ... ஹா... 

இசை சரணம் - 1

குழு ஓ... ஓ... ஓ... ஓ... 

பெண் தூது செல்லடி தோழி வான்மதி
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி
சேதி சொல்லடி தேனின் நாயகி
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி
அணை போட்ட போதும் நிலை மாறிடாது
அலை போல மோதும் மனம் தாங்கிடாது
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது

பெ குழு அவன் வர வேண்டும் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி

பெண் அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

ஆ குழு ஓ... ஓ... ஓ...  ஓ... ஓ... ஓ...   ஓ... ஓ... ஓ...   ஓ... ஓ... ஓ... 

இசை சரணம் - 2

பெ குழு லலலால லாலலா லலலால லாலலா
லலலால லாலலா லலலால லாலலா

குழு ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... 

பெண் கூடல் என்பது கூடி வந்தது
தேடி வந்தது திரை மறைவில் தெரிகிறது
தேகம் என்பது கோவில் போன்றது
யாகம் செய்ய வா பலன் உடனே கிடைக்கின்றது
சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும்
சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும்
காதல் என்ற தேகமே ஆளுகின்ற யோகமே
கலைக் கோயில் தீபம் ஏற்று பாடிப் போற்று ஆசை ஊற்று

பெ குழு கரம் தொடும் போது சுக வரம் தரும் மாது
இரு கரம் தொடும் போது சுக வரம் தரும் பூ மாது

பெண் அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

பெ குழு அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி

பெண் அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1