enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உணவே மருந்து English | tamil | To Print
பாடல் தலைப்பு உணவே மருந்து    திரைப்படம் சர்வர் சுந்தரம் ( 2017 ) 
கதாநாயகன் சந்தானம்  கதாநாயகி வைபவி சாண்டில்யா 
பாடகர்கள்   பாடகிகள் ரஞ்சன் காயத்ரி 
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்   பாடலாசிரியர்கள் விவேக்  
இயக்குநர் ஆனந்த் பல்கி   ராகம்  
வெளியானஆண்டு 2017  தயாரிப்பு ஜே. செல்வகுமார் 

பல்லவி

உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து
இலையோடு சுடு சோறு படும் போது நார்ச் சத்து
செயற்கை இலை போட்டு நஞ்சாக்கினோம்
கொதிக்காத காய் தின்று கிளி பூனை தெம்பாச்சு
அறியாமல் அறிவை நாம் ஐந்தாக்கினோம்
கைக் குத்தல் அரிசிக்குள் கருவாகும் ஊட்டம்
இயந்திரத்தில் தீட்டி கருவறுக்கிறோம்
பாலுக்குள் பதமாக பயிராகும் புரதம்
அதி வேகம் சூடேற்றி அதை அழிக்கிறோம்

உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து
மருந்தே நம் விருந்து...

இசை சரணம் - 1

பழங்காலம் முதலாக இலை போட்டு நாமும்
பலகாரம் வைத்தோமே அதில் அர்த்தம் உண்டு
நெய்யும் பருப்பும் முதலாக உள் சென்று
உணவுக் குழாய் வரை தன்மையாக்கும்
ருசிக்காக உண்டவை செறிக்காத மற்றவை
ரசம் ஊற்ற இவை மாற்றி நன்மையாக்கும்
கருணைக் கிழங்காலே கொழுப்பைக் கரைக்கிறோம்
சாப்பிட்ட சூட்டையே மோர் இட்டணைக்கிறோம்
பாட்டிக்கு தெரிந்தது எந்நாளும் உயர்ந்ததே
ஆராய்ந்து பார்க்க நம் விஞ்ஞானம் மறந்ததே

உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து
விருந்து...

இசை சரணம் - 2

பாயாசம் இனிப்புக்கு பாகற்காய் கசப்புக்கு
புளிசாதம் புளிப்புக்கு வாழைப் பூ துவர்ப்புக்கு
ஊறுகாய் நாவிலே காரமாய்
சிட்டிகை உப்பு தான் ஓரமாய்
அறுசுவையும் நன்மையும் கொண்டாடி வாழ்ந்தவர்
ஒரு சுவையும் இல்லாத உணவுக்கு தாவினோம்
இயந்திரக் குட்டிகள் ஈன்றிடும் பொட்டலம்
நம் சவப் பெட்டிகள் என்பதைக் கூறுவோம்
அக்கறை சேர்த்து தான் உணவிடும் தாய் மனம்
நாமுமே நம் உடல் அப்படி பேணுவோம்

உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து
விருந்து... விருந்து... விருந்து... விருந்து...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1