enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  தாமரை பூவுக்கும் English | tamil | To Print
பாடல் தலைப்பு தாமரை பூவுக்கும்    திரைப்படம் பசும்பொன் 
கதாநாயகன் சிவாஜி கணேசன் - பிரபு - சிவகுமார்  கதாநாயகி ராதிகா / சரண்யா 
பாடகர்கள் கிருஷ்ணசந்தர்  பாடகிகள் சுஜாதா 
இசையமைப்பாளர் வித்யாசாகர்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் பாரதிராஜா   ராகம்  
வெளியானஆண்டு 1995  தயாரிப்பு ஆனந்தி ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

ஆண் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல
மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

பெண் கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல
கண்ட போதே இந்த மூஞ்சி 
நெறஞ்சு போச்சு நெஞ்சுக்குள்ள

ஆண் நாக்குல மூக்கையே ஏஹே தொட்டவன் நானடி
பார்வையால் உசுரையே ஓஹோ தொட்டவ நீயடி

பெண் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண் மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

இசை சரணம் - 1

ஆண் ஐஆர் எட்டு நெல்லப் போல அவசரமா சமஞ்ச
அய்த்த மக பஞ்சத்துக்கு ஆதாரமா அமஞ்ச

பெண் குட்டி போட்ட பூன போல காலச் சுத்தி கொழஞ்ச
பாவமுன்னு நீவி விட்டா கல்லு போட துணிஞ்ச

ஆண் சொந்தக்காரன் நான் தானே தொட்டுப் பாக்கக் கூடாதா

பெண் கன்னம் தொடும் கை ரெண்டும் கீழே கொஞ்சம் நீளாதா

ஆண் இந்த நாட்டில் தீண்டாமை தான் இன்னும் உள்ளதா

பெண் வயசுக்கு வந்த பூ ஒஹோ ஆசையே பேசுமா
வண்டுக்கும் பூவுக்கு ஓஹோ சண்டையா சத்தமா

ஆண் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

பெண் மாமன அள்ளி நான் தாவணி போட்டுக்க
மாலையும் சூடவில்ல

இசை சரணம் - 2

பெண் கம்மாக்குள்ள ஒத்த மரம் அங்கே போவோம் மாமா
கம்மாத் தண்ணி வத்தும் போது திரும்பிருவோம் மாமா

ஆண் நீச்சல் எல்லாம் சொல்லித் தாரேன்
நீயும் கொஞ்சம் வாம்மா
அங்கே இங்கே கையி படும் சொல்லிப் புட்டேன் ஆமா

பெண் நிலாக் கரையை அழிச்சாலும் உன்ன திருத்த முடியாது

ஆண் பொரட்டிப் போட்டு அடிக்காம ஆமை ஓடு ஒடியாது

பெண் போகப் போக மாமனுக்கு புத்தி மாறுது

ஆண் கிள்ளவா அள்ளவா ஓஹோ சொல்லடி செய்யலாம்
வேட்டியா சேலையா ஓஹோ பட்டிமன்றம் வைக்கலாம்

பெண் தாமரை பூவுக்கும் தண்ணிக்கும் என்னைக்கும்
சண்டையே வந்ததில்ல

ஆண் மாமன அள்ளி நீ தாவணி போட்டுக்க
மச்சினி யாரும் இல்ல

பெண் கம்பங்கூழில் போட்ட உப்பு
கஞ்சி எல்லாம் சேர்தல் போல

ஆண் கண்ட போதே இந்த மூஞ்சி 
நெறஞ்சு போச்சு நெஞ்சுக்குள்ள

பெண் மாமனே மாமனே ஓஹோ ஓங்கிட்ட ஒட்டவா
பூமிக்கும் வேருக்கும் ஓஹோ சண்டையா சத்தமா ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1