enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஒரு முறை ஒரே முறை English | tamil | To Print
பாடல் தலைப்பு ஒரு முறை ஒரே முறை    திரைப்படம் காவிய தலைவன் ( 1992 ) 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி பானுப்ரியா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் அரவிந்த் சித்தார்த்தா   பாடலாசிரியர்கள் ஆபாவாணன்  
இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1992  தயாரிப்பு தமிழ் பொன்னி ஆர்ட் 

இசை பல்லவி

ஒரு முறை ஒரே முறை உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலைமுறை உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள் கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்

ஒரு முறை ஒரே முறை...

இசை சரணம் - 1

கட்டழகில் இல்லையடி சிறப்பு
குங்குமப் பொட்டழகில் தான் அது இருக்கு
பொன் நகையில் இல்லையடி மதிப்பு
உன் புன்னகையில் தான் அது இருக்கு
மற்றவர்க்கு நீ தரும் மதிப்பு
உன்னைப் பெற்றவர்க்கு சேர்த்திடும் சிறப்பு
பெற்ற உடன் முடிந்தது கணக்கு
பேரு வைத்த கடன் தீரவில்லை இவர்க்கு
தன் நிலை தவறியே ஆடிடும் பெண்மையே
தன் நிலை தவறியே ஆடிடும் பெண்மையே
உன் நிலை தவறினால் தாழ்ந்திடும் தாய்மையே

ஒரு முறை ஒரே முறை உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலைமுறை உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள் கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும்

இசை சரணம் - 2

மாடி மேல மாடி கட்டி வாழும்
பண வர்கத்துக்குப் பசி எங்கு தெரியும்
கூடு போல வீடு கட்டி வாழும்
ஏழை கூட்டத்துக்குத் தான் அது புரியும்
பிறந்த நாளிலே ஆட்டம் 
வெறும் பணத்துக்குத் தான் இந்தக் கூட்டம்
உன்னை வளர்ப்பது உழைப்பவர் கூட்டம்
அவர் உழைப்பினில் தான் இந்த ஆட்டம்
பிறப்பிலும் இறப்பிலும் ஒன்று தான் தெரியுமா
பிறப்பிலும் இறப்பிலும் நாம் ஒன்று தான் தெரியுமா
வளர்ப்பிலும் வாய்ப்பிலும் நீ வந்தது புரியுமா

ஒரு முறை ஒரே முறை உன்னை அறிந்தாலே போதும்
இனி வரும் தலைமுறை உந்தன் பேர் சொல்லி வாழும்
இந்த நாள் நல்ல நாள் கால காலங்கள் நீ வாழ வேண்டும்
கங்கை இவள் என்று ஊர் சொல்ல வேண்டும் ( இசை )

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1