enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கான கருங்குயிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு கான கருங்குயிலே    திரைப்படம் பொன்மன செல்வன் 
கதாநாயகன் விஜயகாந்த் - ஜெமினி கணேசன்  கதாநாயகி ஷோபனா / சரோஜா தேவி 
பாடகர்கள் மனோ  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் பி.வாசு   ராகம்  
வெளியானஆண்டு 1989  தயாரிப்பு வி. என். எஸ். ஃபிலிம்ஸ் 

பெண் கானக் கருங்குயிலே... காதல் ஓர் பாவமடி...

இசை பல்லவி

பெண் கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
காதல் கணக்கினிலே கண்ணீர் தான் லாபமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது

அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி

இசை சரணம் - 1

ஆண் பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது
வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது
வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது
என் பலம் இன்று தான் அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம் வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்

பெண் கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது

இசை சரணம் - 2

பெண் கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது
கற்பனை ஆயிரம் தான் எண்ணத்தில் ஓடுது 
வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது
பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது
இருந்தால் இனி உன்னோடு தான்
இல்லையேல் உடல் மண்ணோடு தான்
மாலை இடும் வேளை வரும் நாளை 
என்று தான் வாழ்கிறேன்

ஆண் கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
ஆசை உண்டானது அதில் வீடு ரெண்டானது

பெண் அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி

ஆண் காதல் கணக்கினிலே கண்ணீர் தான் லாபமடி

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1