enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காலம் என் காதலி English | tamil | To Print
பாடல் தலைப்பு காலம் என் காதலி    திரைப்படம் 24 
கதாநாயகன் சூர்யா  கதாநாயகி சமந்தா 
பாடகர்கள் பென்னி தயாள்  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் விக்ரம் குமார்   ராகம்  
வெளியானஆண்டு 2016  தயாரிப்பு 2டி என்டர்டெயின்மென்ட் & ஸ்டுடியோ கிரீன் 

இசை பல்லவி

குழு ஏ ஆற்றல் அரசே வா ஏ ஆற்றல் அழகே வா

ஆண் ( ஏ ) மாயம் இல்லை ( ஆற்றல் ) மந்திரம் இல்லை ( அரசே )
ஜாலம் இல்லை ( வா ) தந்திரம் இல்லை
( ஏ ) மாயம் இல்லை ( ஆற்றல் ) மந்திரம் இல்லை ( அழகே )
ஜாலம் இல்லை ( வா ) தந்திரம் இல்லை

குழு காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ

இசை சரணம் - 1

ஆண் சுற்றி வந்தேன் விண்ணின் வெளியிலே
வெற்றி எல்லாம் விரல் நுனியிலே
அச்சம் இல்லை எந்தன் வாழ்விலே
மச்சம் உண்டு எந்தன் நெஞ்சிலே
காலத்தின் சாவி கடிகாரக் கூட்டுக்குள்
காணாத வாழ்க்கை எந்தன் கட்டுப்பாட்டுக்குள்
தருணத்தை வெல்லும் வித்தை நான் சொல்லட்டா
ஆண்டவன் செல்லப் பிள்ளை நானோ நானோ 

குழு காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ

இசை சரணம் - 2

ஆண் காலத்தின் கையில் நானும் பிள்ளை போல ஆவேன்
காதலி கையைப் பற்றி முன்னும் பின்னும் போவேன்
சந்திர சூரியரை கூலியாகக் கேட்பேன்
உலகத்தின் வாழ்வை எல்லாம் ஒற்றை நாளில் வாழ யோசிப்பேன்

குழு வா மச்சக்காரா மாயக்காரா மச்சக்காரா உச்சக்காரா

ஆண் ஆற்றல் அரசே அரசே வா வா 
ஆற்றல் அழகே அழகே வா வா
ஆக்கும் அறிவே அறிவே வா வா
காக்கும் கரமே கரமே வா வா

குழு போற்றும் பொருளே வா மாற்றுத் திறனே வா
போற்றும் பொருளே வா மாற்றுத் திறனே வா

ஆண் ( ஏ ) மாயம் இல்லை ( ஆற்றல் ) மந்திரம் இல்லை ( அரசே )
ஜாலம் இல்லை ( வா ) தந்திரம் இல்லை
( ஏ ) மாயம் இல்லை ( ஆற்றல் ) மந்திரம் இல்லை ( அழகே )
ஜாலம் இல்லை ( வா ) தந்திரம் இல்லை

குழு காலம் என் காதல் ( ஏ ஏ... ஏ ஏ... )
கண் காணா மோகினி ( ஓ ஓ... ஓ ஓ... )
ஐன்ஸ்டீனை மாற்ற வந்த ஆனந்தப் பேரொளியோ
காலம் என் காதலியோ கண் காணா மோகினியோ...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1