enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆண் கவியை வெல்ல வந்த English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆண் கவியை வெல்ல வந்த    திரைப்படம் வானம்பாடி 
கதாநாயகன் எஸ். எஸ். ராஜேந்திரன்  கதாநாயகி தேவிகா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஜி. ஆர். நாதன்   ராகம்  
வெளியானஆண்டு 1963  தயாரிப்பு கே. முருகேசன் 

தொகையறா

ஆண் கல் தோன்றி மண் தோன்றும் முன் தோன்று தமிழே 
கவி மழியில் ஆடி வரும் கன்னி இள மயிலே
சொல்லோடு பொருளேந்தி விளையாட வந்தேன்
துணை வேண்டும் தாயே நின் திருவடிகள் வாழ்க...

பெண் பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தமிழே
பூங்கவிதை வானேறி தவழ்ந்து வரும் நிலவே
மதியறியாச் சிறு மகளும் கவி பாட வந்தேன்
மன்றத்தில் துணை நின்று வாழ்த்துவாய் தாயே...

பல்லவி

ஆண் ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று 
சபையினிலே தருக
ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
நீ அறிந்தவற்றை மறைந்து நின்று 
சபையினிலே தருக

பெண் பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக
பெண் கவியை வெல்ல வந்த பெருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக

இசை சரணம்- 1

ஆண் இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா
இலை இல்லாமல் பூத்த மலர் என்ன மலரம்மா

பெண் அது இளமை பொங்க வீற்றிருக்கும்
கன்னி மலரையா
அது இளமை பொங்க வீற்றிருக்கும்
கன்னி மலரையா
ஆண் வலை இல்லாமல் மீனைப் பிடிக்கும்
தேசம் என்ன தேசம்
வலை இல்லாமல் மீனைப் பிடிக்கும்
தேசம் என்ன தேசம்
பெண் அது வாலிபரின் கண்ணில் உள்ள
காதல் என்னும் தேசம்
அது வாலிபரின் கண்ணில் உள்ள
காதல் என்னும் தேசம்
ஆண் ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
பெண் உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக

இசை சரணம்- 2

ஆண் வாடல் வந்தால் மேனியிலே என்ன உண்டாகும்
பெண் அது கன்னியரை கண்ட உடன் கால்கள் தள்ளாடும்

ஆண் காதலித்தாள் மறைந்து விட்டால் வாழ்வு என்னாகும்
பெண் அன்பு காட்டுகின்ற வேறிடத்தில் காதல் உண்டாகும்

ஆண் ஒரு முறை தான் காதல் வரும் தமிழர் பண்பாடு
பெண் அந்த ஒன்று எது என்பது தான் கேள்வி இப்போது
ஆண் வருவதெல்லாம் காதலித்தால் வாழ்வதெவ்வாறு

பெண் தன் வாழ்க்கையையே காதலித்தால்
தெரியும் அப்போது

ஆண் ஆண் கவியை வெல்ல வந்த பெண் கவியே வருக
பெண் உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக

( வசனம் )

ஆண் 2 ஒன்னுடைய கேள்விக்கெல்லாம்
அவங்க பதில் சொல்லிட்டாங்க
இனிமே அவங்க கேள்வி கேக்கலாமில்ல

ஆண் ம்... கேக்க சொல்லு
ஆண் 2 ஆ...
சரணம்- 3

பெண் தாதி தாது தீது தத்தும் தத்தை சொல்லாது
தூதி தூது ஒத்தித்தது தூது செல்லாது
ஆண் என்னது

பெண் தேது தித்து தொத்துத் தீது தெய்வம் வராது
ஆண் ஓஹ்ஹொஹொஹொ

பெண் இன்று துத்து தத்தும் தத்தை வாழ தித்தித்ததோது
( வசனம் )

ஆண் என்னப்பா கேள்வியா இது என்ன ஒளர்றாங்க
ஆண் 2 ம்... அவங்க ஒண்ணும் ஒளர்ல 
நீ தான் தெணர்ற

ஆண் செச்சே... நான் தெணர்றதாவது
ஆண் 2 பின்னென்ன...
வேணுன்னா நீ தோல்விய ஒப்புக்க
அவங்களே அர்த்தம் சொல்றாங்க
ஆண் இது மொதல்ல அர்த்தத்த சொல்லச் சொல்லுங்க
அப்புறம் பேசிக்கலாம்

ஆண் 2 சரி... சொல்லுங்க
சரணம்- 4

பெண் அடிமை தூது பயன் படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
அடிமை தூது பயன் படாது கிளிகள் பேசாது
அன்புத் தோழி தூது சென்றால் விரைவில் செல்லாது
தெய்வத்தையே தொழுது நின்றால் பலனிருக்காது
தெய்வத்தையே தொழுது நின்றால் பலனிருக்காது
இளம் தேவை கொண்ட கன்னி வாழ்வு இனியது கூறு
இளம் தேவை கொண்ட கன்னி வாழ்வு இனியது கூறு

பெண் கவியை வெல்ல வந்த திருமகனே வருக
உங்கள் பெட்டகத்தை திறந்து வைத்து
பொருளை அள்ளித் தருக ( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1