enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆஹா மெல்ல நட மெல்ல நட English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆஹா மெல்ல நட மெல்ல நட    திரைப்படம் புதிய பறவை 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி சரோஜா தேவி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் டாடா மிராசி   ராகம்  
வெளியானஆண்டு 1964  தயாரிப்பு சிவாஜி பிலிம்ஸ் 

இசை பல்லவி

ஆஹா மெல்ல நட மெல்ல நட 
மேனி என்னாகும் ( இசை )

ஆஹா மெல்ல நட மெல்ல நட 
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் 
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்...
ஓ... ஓ… ஹோ ஹோ…

ஆஹா மெல்ல நட மெல்ல நட 
மேனி என்னாகும்

இசை சரணம் - 1

படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித் திரையால் அதை மறைத்தான்
படுக்கையை இறைவன் விரித்தான்
வரும் பனித் திரையால் அதை மறைத்தான்
பருவத்தில் ஆசையை கொடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்
வரும் நாணத்தினால் அதை தடுத்தான்...

ஆஹா மெல்ல நட மெல்ல நட 
மேனி என்னாகும்

இசை சரணம் - 2

அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு
அதில் அழகிய மேனியின் நடிப்பு
அடிக்கடி சிரிக்கும் சிரிப்பு
அதில் அழகிய மேனியின் நடிப்பு
படபட என வரும் துடிப்பு
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு
இன்று பதுங்கியதே என்ன நினைப்பு...

ஆஹா மெல்ல நட மெல்ல நட 
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் 
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்...
ஓ... ஓ… ஹோ ஹோ…

ஆஹா மெல்ல நட மெல்ல நட 
மேனி என்னாகும்

இசை சரணம் - 3

திருமணம் என்றதும் அடக்கம்
கண்கள் திறந்திருந்தாலும் உறக்கம்
வருவதை நினைத்தால் நடுக்கம்
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்
பக்கம் வந்து விட்டாலோ மயக்கம்...

ஹையா மெல்ல நட மெல்ல நட 
மேனி என்னாகும்
முல்லை மலர் பாதம் நோகும் 
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ணச் சிங்காரம் குலைந்து விடும்...
ஓ... ஓ… ஹோ ஹோ…

ஆஹா மெல்ல நட மெல்ல நட 
மேனி என்னாகும் ( இசை )


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1