enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உலகமெனும் நாடகமேடையில் English | tamil | To Print
பாடல் தலைப்பு உலகமெனும் நாடகமேடையில்    திரைப்படம் சிரித்து வாழ வேண்டும் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி லதா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் எஸ்.எஸ்.பாலன்   ராகம்  
வெளியானஆண்டு 1974  தயாரிப்பு உதயம் புரொடக்ஷன்ஸ் 
        உலகமெனும் நாடக மேடையில்

        இசை பல்லவி 

ஆண் 1 உலகமெனும் நாடக மேடையில்
        நானொரு நடிகன் ( இசை )
  
        உலகமெனும் நாடக மேடையில்
        நானொரு நடிகன் 
        உரிமையுடன் வாழ்ந்திடும் வாழ்க்கையில்
        உங்களில் ஒருவன் 
        ஆ... ஆ...   ஆ... ஆ... 

        ஆடுவது கடமையின் நினைவாக 
        பாடுவது இதயங்கள் தெளிவாக
        ஆடுவது கடமையின் நினைவாக 
        பாடுவது இதயங்கள் தெளிவாக

குழு   ஆடுவது கடமையின் நினைவாக 
        பாடுவது இதயங்கள் தெளிவாக  
  
        இசை சரணம் - 1

பெண் சிரிக்கச் சிரிக்க வந்து
        நடிக்கும் கலையில் ஒரு
        சிந்தனை வளர்கிறது...
        ஆ... ஆ... ஆ... ஆ... 

        சிரிக்கச் சிரிக்க வந்து 
         நடிக்கும் கலையில் ஒரு
         சிந்தனை வளர்கிறது 
        அதில் குறுக்கு வழியில் சென்று
         பிழைப்பு நடத்துபவர்  நிம்மதி கெடுகிறது 

ஆண் 1 தனக்குத் தனக்கு என்று
        நினைக்கும் மனது எந்த
        நாளிலும் உயராது
        இனி எடுத்து மறைத்த பொருள்
        அனைத்தும் பொதுவில் வரும்
        நாள் வரும் தடையேது  

குழு   யாஹு யாஹு  யாஹு  யாஹு யாஹு 
        யாஹு யாஹு யாஹு யாஹு யாஹு யாஹு 

ஆண் 1 ஆ... ஆ... ஆ...   

பெண் ஆ... ஆ... ஆ...    

ஆண் 1 சிலர் ஆடிடும் ஆட்டம் முடிவதற்கே 
        நான் ஆடியும் பாடியும் நடிப்பது 
        என் ஆசையும் தேவையும் நல்லவர் எல்லாம்
        நலமாய் வாழ்ந்திட நினைப்பது 
        எண்ணியது விரைவினில் நிறைவேறும் 
        இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும் 

குழு   எண்ணியது விரைவினில் நிறைவேறும் 
        இங்கு சிலர் கேள்விக்கு பதில் கூறும்  

        இசை தொகையறா

ஆண் 2 மண்ணில் மறைவாக
        என்ன விதை போட்டாலும்...
        போட்ட விதை என்னவென்று
        மரம் வளர்ந்து காட்டாதோ... ஓ...
        கண்ணை மறைத்தென்ன
        காரியத்தைச் செய்தாலும்..
        காலக் கணக்கனவன்
        காட்டி வைக்க மாட்டானோ... ஒ... ஓ... ( இசை )

ஆண் 1 ஆடுவது கடமையின் நினைவாக 
        பாடுவது இதயங்கள் தெளிவாக                  
        ஆடுவது கடமையின் நினைவாக 
        பாடுவது இதயங்கள் தெளிவாக

குழு   ஆடுவது கடமையின் நினைவாக 
        பாடுவது இதயங்கள் தெளிவாக

        இசை சரணம் - 2

பெண் நெருப்பை மடியில் கட்டி
        உறங்க நினைத்துச் செல்லும்
        நெஞ்சமும் இருக்கிறது 
        பெரும் கனத்தை மடியில் வைத்து
        பயத்தை மனிதல் வைத்து
        கால்களும் நடக்கிறது

குழு         நெருப்பை மடியில் கட்டி
        உறங்க நினைத்துச் செல்லும்
        நெஞ்சமும் இருக்கிறது 
        பெரும் கனத்தை மடியில் வைத்து
        பயத்தை மனிதல் வைத்து
        கால்களும் நடக்கிறது

ஆண் 1 உலகம் விடிந்த பின்னும்
        இருட்டில் இருந்து பிறர்
        கண்களை மறைக்கிறது 
        அது மருந்தை நினைத்துக் கொண்டு
        விஷத்தை அருந்தி விட்டு
        வாழ்ந்திட நினைக்கிறது 

குழு   யாஹு யாஹு  யாஹு  யாஹு யாஹு 
        யாஹு யாஹு யாஹு யாஹு யாஹு யாஹு 

 ஆண் 1 ஏ... ஏ... ஏ...

பெண் ஆ... ஆ... ஆ...

ஆண் 1 ஆடுவது கடமையின் நினைவாக 
        பாடுவது இதயங்கள் தெளிவாக

குழு   ஆடுவது கடமையின் நினைவாக 
        பாடுவது இதயங்கள் தெளிவாக
        யாஹு யாஹு  யாஹு  யாஹு யாஹு 
        யாஹு யாஹு யாஹு யாஹு யாஹு யாஹு 

        ( இசை )
   
        ஹோய்... பலே பலே பலே பலே
        பலே பலே பலே பலே பலேய்... ( இசை )
    


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1