enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னைப் பார்த்து English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னைப் பார்த்து    திரைப்படம் அடிமைப் பெண் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி ஜெயலலிதா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் கே.சங்கர்   ராகம்  
வெளியானஆண்டு 1969  தயாரிப்பு  
         உன்னைப் பார்த்து

       இசை பல்லவி

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது      
உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது  
உன் செயலைப் பார்த்து  உன் நிழலும் வெறுக்கிறது 
உன் செயலைப் பார்த்து  உன் நிழலும் வெறுக்கிறது 

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது      

இசை சரணம் - 1

பாடும் பறவை பாயும் மிருகம் 
இவைகளுக்கெல்லாம் பகுத்தறிவில்லை  
ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை        

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது      

இசை சரணம் - 2

சேவல் கூடத்  தூங்கும் உலகை 
கூவியெழுப்பும் குரலாலே  ( குரல் )

ஏவல் செய்யும் காவல் காக்கும் 
நாய்களும் தங்கள் குணத்தாலே ( குரல் )

இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே ( குரல் )

இரை கிடைத்தாலும் இல்லை என்றாலும்
உறவை வளர்க்கும் காக்கைகளே 
இனத்தை இனமே பகைப்பதெல்லாம்
மனிதன் வகுத்த வாழ்க்கையிலே...
ஆ... ஆ... ஆ... ஆஹ்ஹஹா...           

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது

இசை சரணம் - 3

வானில் நீந்தும் மேகம் கண்டால்
வண்ண மயில்கள் ஆடாதோ ( இசை )  

வாழை போலே தோகை விரிய
வளர் பிறை ஆயிரம் தோன்றாதோ ( இசை )  

அழகும் கலையும் வாழும் நாடு 
ஆண்டவன் வீடாய் திகழாதோ ( இசை )  

அழகும் கலையும் வாழும் நாடு 
ஆண்டவன் வீடாய் திகழாதோ
அவைகளை எல்லாம் அழிக்க நினைத்தால்
சரித்திரம் உன்னை இகழாதோ...
ஆ... ஆ... ஆ... ஆஹ்ஹஹா...                

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது      

இசை சரணம் - 4

நீ கடவுளை பார்த்தது கிடையாது  
அவன் கறுப்பா சிகப்பா  தெரியாது  
நீ கடவுளை பார்த்தது கிடையாது  
அவன் கறுப்பா சிகப்பா  தெரியாது  
இறைவன் ஒருவன் இருக்கின்றான்  
இந்த ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்
இறைவன் ஒருவன் இருக்கின்றான்  
ஏழைகள் உழைப்பில் சிரிக்கின்றான்...
ஆ...ஆ...ஆ...ஆஹ்ஹஹா (இசை)    

தோன்றத் தான் போகிறது 
சம உரிமை சமுதாயம்... ( இசை )

மறையத் தான் போகிறது 
தனி மனிதன் அநியாயம்... 
மலரத் தான் போகிறது எங்களது புது வாழ்வு...
மாறத் தான் போகிறது மனிதா உன் விளையாட்டு...


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1