enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  சீர்மேவும் குருபதம் English | tamil | To Print
பாடல் தலைப்பு சீர்மேவும் குருபதம்    திரைப்படம் சக்கரவர்த்தித் திருமகள் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி அஞ்சலிதேவி 
பாடகர்கள் சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர் ப.நீலகண்டன்   ராகம்  
வெளியானஆண்டு 18.01.1957  தயாரிப்பு உமா பிக்சர்ஸ் 
                   சீர்மேவும் குருபதம்

                 இசை தொகையறா

ஆண் 1 சீர்மேவும் குருபதம் சிந்தையொடு வாக்கிலும்
                சிரமீது வைத்துப் போற்றி
                ஜெகமெலாமெச்ச ஜெயக் கொடி பறக்க விடும்
                தீர ப்ரதாபன் நானே

           பல்லவி

ஆண் 1 சங்கத்துப் புலவர் பலர் 
                தங்கத் தோடாப் பொற்பதக்கம்
                வங்கத்துப் பொன்னாடைப் பரிசளித்தார்
                எனக்கிங்கில்லை ஈடெனச் சொல்லிக் களித்தார் 
                இந்த சிங்கத்துக்கு முன்னே ஓடி 
                பங்கபட்டவர் அனேகர்
                சீரெடுத்துப் பாடி வாறேன் நேரே அதற்கு
                ஓரெழுத்துப் பதில் சொல்லிப் பாரேன்

                இசை சரணம் - 1

ஆண் 2 யானையைப் பிடித்து 
                யானையைப் பிடித்து ஒரு 
                பானைக்குள் அடைத்து வைக்க
                ஆத்திரப்படுபவர் போலல்லவா

                யானையைப் பிடித்து ஒரு 
                பானைக்குள் அடைத்து வைக்க
                ஆத்திரப்படுபவர் போலல்லவா உமது
                ஆரம்பக் கவி சொல்லுதே புலவா 
                வீட்டுப் பூனைக்குட்டி காட்டிலோடி 
                புலியைப் பிடித்துத் தின்னப்
                புறப்பட்ட கதைப் போலே அல்லவா 
                தற்புகழ்ச்சி பாடுகிறாயே புலவா

                இசை சரணம் - 2

ஆண் 1 ஆங்... அப்புறம்
                ஓஹோ... சரி தான்
                பூ தானம் கன்னிகா தானம் 
                சொர்ண தானம் அன்ன தானம்
                கோ தானம் உண்டு பற்பல 
                தானங்கள் இதற்கு
                மேலான தானமிருந்தால் சொல்லுங்கள்

                ஹேய்... கேள்விக்குப் பதிலைக் 
                கொண்டா டேப்பை
                உடச்சு எறிவேன் ரெண்டா  உன்ன
                ஜெயித்துத் தட்டுவேன் முண்டா  அப்புறம்
                பறக்க விடுவேன் ஜண்டா
                ஜெயக்கொடி ஜெயக்கொடி 
                பறக்குது ஜெயக்கொடி ( இசை )

ஆண் 1 பதில்...

ஆண் 2 சொல்றேன்...

              சரணம் - 2

ஆண் 2 எத்தனை தானந் தந்தாலும் 
                எந்த லோகம் புகழ்ந்தாலும்
                தானத்தில் சிறந்தது நிதானந்தான்  

ஆண் 1 ஆங்

ஆண் 2 நிதானந்தான் 
                எத்தனை தானந் தந்தாலும் 
                எந்த லோகம் புகழ்ந்தாலும்
                தானத்தில் சிறந்தது நிதானந்தான் 
                நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான் 
                நிதானத்தை இழந்தவர்க்கு ஈனந்தான் ( இசை )

ஆண் 1 சொல்லிட்டான் இரு
                கோவிலைக் கட்டி வைப்பது எதனாலே
                இதுக்கு பதில் சொல்ல முடியாது தம்பீ
                கோவிலைக் கட்டி வைப்பது எதனால

ஆண் 2 சிற்ப வேலைக்குப் பெருமையுண்டு 
                அதனாலே

ஆண் 1 போச்சுடா... ஹு... ஹு... ஹு... சரி தான்

ஆண் 2 அன்ன சத்திரம் இருப்பதெதனாலே

ஆண் 1 அன்ன சத்திரம்... என்ன சொன்ன

ஆண் 2 அன்ன சத்திரம் இருப்பதெதனாலே

ஆண் 1 பல திண்ணைத் தூங்கிப் பசங்கள் 
                இருப்பதாலே எப்படி... ஹி ஹி

ஆண் 2 பரதேசியாய்த் திரிவதெதனாலே...
                ஏ... ஆ... ஆ... ஆ...
                பரதேசியாய்த் திரிவதெதனாலே

ஆண் 1 ஹ... அவன் பத்து வீட்டு
                ஆம்... ஆ... ம்... சரி... வேணாம்

                அவன் பத்து வீட்டுச் சோறு 
                ருசி கண்டதாலே
                தம்பி இங்கே கவனி
                காரிருள் சூழுவது எவ்விடத்திலே தம்பி
                காரிருள் சூழுவது எவ்விடத்திலே

ஆண் 2 கற்றறிவில்லாத மூடர் நெஞ்சகத்திலே
 
ஆண் 1 சே...

ஆண் 2 அண்ணே

ஆண் 1 ஏங்...

ஆண் 2 கற்றறிவில்லாத  மூடர் நெஞ்சகத்திலே

ஆண் 1 சொல்லிப்புட்டியே

ஆண் 2 புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது

ஆண் 1 புகையும் நெருப்பில்லாமல் 
                அது எப்படி எரியும்

ஆண் 2 நான் சொல்லட்டுமா

ஆண் 1 சொல்லு

ஆண் 2 புகையும் நெருப்பில்லாமல் எரிவதெது
                பசித்து வாடும் மக்கள் வயிறு அது
                பசித்து வாடும் மக்கள் வயிறு அது

ஆண் 1 சரி தான் சரி தான் சரி தான்

ஆண் 2 உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
 
ஆண் 1 கத்தி

ஆண் 2 இல்லை
 
ஆண் 1 கோடாலி

ஆண் 2 இல்லை
 
ஆண் 1 ஈட்டி

ஆண் 2 ம்ஹும்...

ஆண் 1 ஹம்... கடப்பாறை 

ஆண் 2 இல்ல

ஆண் 1 அதுவும் இல்லையா
                அப்புறம் பயங்கரமான ஆயுதம்  
                அக்கினி திராவகமோ
                அது ஆயுதம் இல்லையே  
                ஆ... ஈ எறும்பு... தெரிய மாட்டங்கதே 
                அட நீயே சொல்லப்பா
 
ஆண் 2 உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது
                நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் 
                நாக்குத் தான் அது

ஆண் 1 ஆஹா... ஹா... ஹா

ஆண் 2 நிலை கெட்டுப் போன நயவஞ்சகரின் 
                நாக்குத் தான் அது

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1