enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது English | tamil | To Print
பாடல் தலைப்பு உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது    திரைப்படம் பழனி 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி தேவிகா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் விஸ்வநாதன் * ராமமூர்த்தி   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் பீம் சிங்   ராகம்  
வெளியானஆண்டு 1965  தயாரிப்பு பாரத மாதா பிக்சர்ஸ் 

இசை பல்லவி

பெண் உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது 
ஒன்றல்ல கண்ணா 
சொன்னால் சொன்னால் 
அதில் சுகமில்லை கண்ணா
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது 
ஒன்றல்ல கண்ணா ( இசை )
ஆண் கன்னத்துகுள்ளே கனிந்திருப்பது 
ஆயிரம் கண்ணே
கண்ணாலதை கண்டால் மட்டும் 
சுகமில்லை கண்ணே 
சுகமில்லை கண்ணே
உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது 
ஒன்றல்ல கண்ணே
இசை சரணம் - 1

ஆண் அல்லிப் பூவை போலிருக்கும் 
அழகிய மேனி
நான் அங்கு வந்து தேனெடுத்து 
பாடிடும் தேனி
இங்கு போதை கொண்டு ஜாடை காட்டும் 
மலையினில் ஏறி
நான் பொய்கை மீது தாவிடுவேன் 
உன் பெயர் கூறி
பெண் அஹஹா... ஹா... அஹஹா... ஹா...
ஆண் உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது 
ஒன்றல்ல கண்ணே
இசை சரணம் - 2

பெண் வாழை தோட்டம் போட்டது போல் 
கால்கள் இரண்டு
அதை வட்டம் போட்டு வருவதென்ன 
கண்கள் இரண்டு
நல்ல பாலும் தேனும் பெண் வடிவில் 
ஒன்று திரண்டு
உன்னை பருக சொல்லி உருகியதோ 
அருகினில் வந்து
ஆண் அஹஹா... ஹா... அஹஹா... ஹா...
பெண் உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது 
ஒன்றல்ல கண்ணா
இசை சரணம் - 3

ஆண் மெல்ல மெல்ல கண்ணை மூடி 
திறந்திட வேண்டும்
கதை சொல்லச் சொல்ல இதழ் இரண்டும் 
சிவந்திட வேண்டும்

பெண் சொல்லும் போது பெண்ணை கொஞ்சம் 
தானிக்க வேண்டும்
என்னை தோழி பார்த்து சிரித்திடாமல் 
அருள் செய்ய வேண்டும்
அஹஹா... ஹா... அஹஹா... ஹா...

ஆண் உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது 
ஒன்றல்ல கண்ணே...


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1