enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உலகம் வெறும் இருட்டு English | tamil | To Print
பாடல் தலைப்பு உலகம் வெறும் இருட்டு    திரைப்படம் தியாகம் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி ல‌ஷ்மி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் கே.விஜயன்   ராகம்  
வெளியானஆண்டு 1978  தயாரிப்பு கே. பாலாஜி 

இசை பல்லவி

உலகம் வெறும் இருட்டு 
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
உலகம் வெறும் இருட்டு 
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
எல்லாரும் போன வழி நான் போகும் முன்னே
இரண்டில் ஒன்று 
அட இரண்டில் ஒன்று பார்ப்பேனடா 
எந்த எமனையும் கேள்வி கேட்பேனடா

உலகம் வெறும் இருட்டு 
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

இசை சரணம் - 1

தேடும் காசு பண வேட்டை நீ ஊரடிச்ச மூட்டை
ஒரு காலம் வந்தா தாளம் தந்தினத் தானா

டும்க்கு டப்பா தகர டப்பா
டும்க்கு டப்பா தகர டப்பா
அம்க்கு டப்பா தகர டப்பா
தகர டப்பா என்ன வெலப்பா

தேடும் காசு பண வேட்டை நீ ஊரடிச்ச மூட்டை
ஒரு காலம் வந்தா தாளம் தந்தினத் தானா
திருடிச் சேர்த்த பணம் நிக்காதுடா 
ஒன்னெ வெக்காதுடா 
அது போற வழிக்காகாதுடா 
நல்லது கெட்டது எத்தன வந்தது
எத்தன நின்னது எத்தன போச்சுது
சுத்தின காசுக்கு பத்திரம் பண்ணுற டேய்...

உலகம் வெறும் இருட்டு 
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

இசை சரணம் - 2

ஜாதி ரெண்டுன்னு சொன்னது அவ்வை சொன்னது
அங்கேயே நின்னது அங்கேயே நின்னது 
தர்மம் என்ன பண்ணுது
ஜாதி ரெண்டுன்னு சொன்னது அவ்வை சொன்னது
அங்கேயே நின்னது தர்மம் என்ன பண்ணுது
தத்துவத்தை பழிக்காதே தேங்காச் சாமி
சாதி பேதம் பார்ப்பதில்லே நம்ம சாமி 
அட அம்மன் சாமி...
அம்மன் சாமி வேலப் பாரு
ஆமாம் சாமி வேலை எதுக்கு

உலகம் வெறும் இருட்டு 
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு

இசை சரணம் - 3

பூசை நாலு தரம் பண்ணு நீ ஏழு தரம் தின்னு 
நீ ஊர்ப் பணத்த தின்னா வாயில மண்ணு
பூசை நாலு தரம் பண்ணு நீ ஏழு தரம் தின்னு 
நீ ஊர்ப் பணத்த தின்னா வாயில மண்ணு
ஒடம்பு ரப்பரைப் போல் வீங்குதடா
பூமி தாங்குதடா சாமி எப்போதும் தாங்காதடா
கட்டி முடிச்சவன் வீட்டில் இல்லடா
வீட்டில் உள்ளவன் கட்டியதல்லடா
எத்தனை சொல்லியும் புத்தி பொறக்கல டேய்...

உலகம் வெறும் இருட்டு 
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு
எல்லாரும் போன வழி நான் போகும் முன்னே
இரண்டில் ஒன்று 
அட இரண்டில் ஒன்று பார்ப்பேனடா 
எந்த எமனையும் கேள்வி கேட்பேனடா

உலகம் வெறும் இருட்டு 
நீ உருப்படியா ஏத்திக்கடா விளக்கு...


Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1