enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அதிசயம் பார்த்தேன் மண்ணிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு அதிசயம் பார்த்தேன் மண்ணிலே    திரைப்படம் கலை அரசி 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள் சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்  பாடகிகள் பி. சுசீலா / உமா ரமணன் 
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  
இயக்குநர் ஏ.காசிலிங்கம்   ராகம்  
வெளியானஆண்டு 19.04.1963  தயாரிப்பு சரோடி பிரதர்ஸ் 
     அதிசயம் பார்த்தேன் மண்ணிலே

                        தொகையறா

தஞ்சமென்று வந்தவரை தாய்போல ஆதரித்து
வஞ்சகரின் செயல்களுக்கு வாள் முனையில் தீர்ப்பளித்து
அஞ்சாத நெஞ்சில் அன்புக்கு இடங்கொடுத்து
அறங்காக்கும் மக்களிடம் பார்த்த விந்தையை சொல்லட்டுமா

                        பல்லவி

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே நான்
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே  அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே

       (இசை)                      சரணம் - 1

மூணுபக்கமும் கடல் தாலாட்டுது தன்
மானமுள்ள மக்களைப் பாராட்டுது
மூணுபக்கமும் கடல் தாலாட்டுது தன்
மானமுள்ள மக்களைப் பாராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது
வானுயரும் மலையில் அருவி பெருகியே
வந்துவந்து நிலத்தை நீராட்டுது பல
வளம்பெருகி மறவர் பேர் நாட்டுது பல
வளம்பெருகி மறவர் பேர் நாட்டுது       

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே

       (இசை)                        சரணம் - 2

மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு அதில்
மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
மலையைச் செதுக்கிவச்ச சிலையிருக்கு அதில்
மனங்கவரும் அழகுக் கலையிருக்கு
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு
மானிருக்கு வண்ண மயிலிருக்குச்
செந்தேனிருக்கு வீரச் செயலிருக்கு        

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே

       (இசை)                        சரணம் - 3

அங்கே சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும் தழுவி
சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர்தொட்டு மணம்சுமந்து வரும்  அங்கே-
சந்தன மரக்கிளையும் தமிழ்க்கடலும் தழுவி
சந்தமிசைத்துத் தென்றல் தவழ்ந்து வரும்
செந்தாழை மலர்தொட்டு மணம்சுமந்து வரும்  இங்கே
தங்கிட நிழலுமில்லை பொங்கிடக் கடலுமில்லை   சற்று
நேரங்கூட வெயில் மறைவதில்லை  இங்கே
தங்கிட நிழலுமில்லை பொங்கிடக் கடலுமில்லை   சற்று
நேரங்கூட வெயில் மறைவதில்லை
நம்மைத் தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.    
நம்மைத் தழுவிடத் தென்றலெதும் வருவதில்லை.    

அதிசயம் பார்த்தேன் மண்ணிலே  அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே  நான்
அதிசயம் பார்த்தேன் மண்ணிலே  அது
அப்படியே நிக்குது எங்கண்ணிலே   

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1