enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கண்ணாமூச்சி ஏனடா English | tamil | To Print
பாடல் தலைப்பு கண்ணாமூச்சி ஏனடா    திரைப்படம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் 
கதாநாயகன் மம்முட்டி * அஜித் * அப்பாஸ்  கதாநாயகி தபு * ஐஸ்வர்யா ராய் 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 2000  தயாரிப்பு கலைப் புலி எஸ். தாணு 

பல்லவி
பெண் கண்ணாமூச்சி ஏனடா... ( இசை )
ஆண் கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா... 

இருவர் கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா
நான் கண்ணாடிப் பொருள் போலடா 
பெண் கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா 
நான் கண்ணாடிப் பொருள் போலடா 
ஆண் அந்த நதியின் கரையை நான் கேட்டேன் 
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன் 
பெண் அந்த நதியின் கரையை நான் கேட்டேன் 
அந்த காற்றை நிறுத்தியும் கேட்டேன் 
ஆண் வான் வெளியை கேட்டேன்
விடையே இல்லை 
வான் வெளியை கேட்டேன்
விடையே இல்லை 
இறுதியில் உன்னைக் கண்டேன் 
இருதய பூவில் கண்டேன் 
இறுதியில் உன்னைக் கண்டேன் 
இருதய பூவில் கண்டேன் 
கண்ணாமூச்சி ஏனடா 

பெண் என் கண்ணா நான் 
கண்ணாடிப் பொருள் போலடா...
இசை சரணம் - 1

பெண் என் மனம் உனக்கொரு 
விளையாட்டு பொம்மையா 
ஆண் என் மனம் உனக்கொரு 
விளையாட்டு பொம்மையா
எனக்கென உணர்ச்சிகள் 
தனியாக இல்லையா
நெஞ்சின் அலை உறங்காது
பெண் உன் இதழ் கொண்டு வாய் மூட 
வா என் கண்ணா... ஆ...
உன் இதழ் கொண்டு வாய் மூட 
வா என் கண்ணா
உன் இமை கொண்டு விழி மூட வா
உன் உடல் தான் என் உடையல்லவா
பாற்கடலில் ஆடிய பின்னும் 
உன் வண்ணம் மாறவில்லை இன்னும் 
ஆண் பாற்கடலில் ஆடிய பின்னும் 
உன் வண்ணம் மாறவில்லை இன்னும் 
இருவர் என் நெஞ்சில் கூடியே நிறம் மாறவா
என்னுயிரில் நீ வந்து சேர்க 
உதடுகள் ஈரமாய் வாழ்க
ஆண் கலந்திட வா...

இருவர் கண்ணாமூச்சி ஏனடா என் கண்ணா நான் 
கண்ணாடிப் பொருள் போலடா

பெண் கண்ணாடிப் பொருள் போலடா
இசை சரணம் - 2

பெண் வான் மழை விழும் போது 
மலை கொண்டு காத்தாய் 
வான் மழை விழும் போது 
மலை கொண்டு காத்தாய் 
கண் மழை விழும் போது 
எதில் என்னை காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா 
என் கண்ணா 
அதை நீ காண கண்ணில்லையா
உன் கனவுகளில் நானில்லையா
தினம் ஊசலாடுதென் மனசு 
அட ஊமையல்ல என் கொலுசு
என் உள் மூச்சிலே உயிர் வீங்குதே
என்னுயிர் துடிக்காமலே 
காப்பது உன் தீண்டலே 
உயிர் தர வா...
இருவர் கண்ணாமூச்சி ஏனடா 
ஆண் என் கண்ணா நான் 
கண்ணாடிப் பொருள் போலடா...

பெண் கண்ணாடிப் பொருள் போலடா...


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1