enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  பூவென்றும் பொன்னே என்றும் English | tamil | To Print
பாடல் தலைப்பு பூவென்றும் பொன்னே என்றும்    திரைப்படம் துருவ நட்சத்திரம் 
கதாநாயகன் அர்ஜூன்  கதாநாயகி பல்லவி 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் சித்ரா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ராஜா   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு ப்ரிமியர் பிக்சர்ஸ் 

இசை பல்லவி

ஆண் பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்
பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம் தான்
உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம் தான்

பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

இசை சரணம் - 1

பெண் தேகத்திலே தந்த மோகத்திலே
வந்த வேகத்தில் விளைந்ததென்ன

ஆண் நேரத்திலே வந்த பாரத்திலே
இதழ் ஈரத்தில் மலர்ந்ததென்ன

பெண் தோற்றத்திலே மனம் தோற்றதிலே
தூக்கம் கெட்டு உனைப் பார்த்ததிலே

ஆண் பூ மாலை போல் என்னை
நீ சேரும் பொன் மாலை
நான் காண்பேன் ஆனந்தம்

பெண் பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

இசை சரணம் - 2

ஆண் சொர்கத்திலே உந்தன் பக்கத்திலே
தந்த சொந்தத்தில் சுகம் வடித்தேன்

பெண் கூடத்திலே மணி மாடத்திலே
தந்த பாடத்தில் எனை இழந்தேன்

ஆண் கூந்தல் என்னும் ஒரு வீட்டுக்குள்ளே
கூடு கட்டும் இசைப் பூங்குயிலே

பெண் பூ மேனி நூலானேன் பூ இன்று ஆளானேன்
பாலாடை போல் ஆனேன்

ஆண் பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

பெண் பூந்தேகம் நான் ஏந்தும் பொன்னோடம் தான்

ஆண் உன் மோகம் என் நெஞ்சின் பூபாளம் தான்

பெண் பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

ஆண் பூவென்றும் பொன்னே என்றும்
வாயார உன்னைப் பாடும் நேரம்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1