enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை தேடி தேடி English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை தேடி தேடி    திரைப்படம் கொஞ்சி பேசலாம் 
கதாநாயகன் வம்சி  கதாநாயகி ஸ்ரீஜா 
பாடகர்கள்   பாடகிகள் சாதனா சர்கம் 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் ஆர். காளீஸ்வரன்   ராகம்  
வெளியானஆண்டு 2003  தயாரிப்பு ஸ்டேன்லி ராஜன் 

இசை பல்லவி

உன்னைத் தேடித் தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
உன்னைக் காணும் நேரம் கண்ணின் துளிகள்
என் தோளில் விழுந்து இறங்கும்
இங்கு என்னை மீட்டும் உனது பாடல்
உயிரை சூடும் வரமா

உன்னைத் தேடித் தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
உன்னைத் தேடித் தேடி...

இசை சரணம் - 1

கண்ணும் இமையும் இரு பாகமா ஆ...
கண்ணும் இமையும் இரு பாகமா
பிரியும் போது அது தூங்குமா
உனது வானில் வரும் வெண்ணிலா
எனது இரவுகளைச் சொல்லுமா
நீ தரும் இசையில் நனைகிறேன்
நனைந்த சிறகுடன் சிலிர்க்கிறேன்
ஓர் இதழ் மலரைப் போலவே
வலிக்கும் தனிமையில் துடிக்கிறேன்
உனது பாடல் எனது தேடல்
இரண்டும் சேருகின்ற நாளை எண்ணி

உன்னைத் தேடித் தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
இங்கு என்னை மீட்டும் உனது பாடல்
உயிரை சூடும் வரமா

உன்னைத் தேடித் தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
உன்னைத் தேடித் தேடி...

இசை சரணம் - 2

உனது நினைவில் இங்கு வாழ்கிறேன்...
உனது நினைவில் இங்கு வாழ்கிறேன்
உனது வார்த்தைகளைப் பாடினேன்
நடந்து போகும் வழி யாவிலும்
உனது சுவடுகளைத் தேடினேன்
தீபம் கயல் விழியில் ஏற்றினேன்
மனதில் மலர்களை தூவினேன்
நீ வரும் நினைவில் மாலையில்
எனக்குள் உன்னுடன் பேசினேன்
கனவுப் பாடம் போட்டு நடத்து
கண்கள் கூடுகின்ற காலம் பார்த்து

உன்னைத் தேடித் தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
இங்கு என்னை மீட்டும் உனது பாடல்
உயிரை சூடும் வரமா

உன்னைத் தேடித் தேடி காற்றில் கலந்து
என் இசையின் பயணம் தொடங்கும்
உன்னைத் தேடித் தேடி...

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1