enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  புலர்கின்ற பொழுது ( கல்லில் உயிர் ) English | tamil | To Print
பாடல் தலைப்பு புலர்கின்ற பொழுது ( கல்லில் உயிர் )    திரைப்படம் உளியின் ஓசை 
கதாநாயகன் வினித்  கதாநாயகி கீர்த்தி சாவ்லா 
பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி - இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் இளவேனில்   ராகம்  
வெளியானஆண்டு 2008  தயாரிப்பு நந்தினி ஆர்ட்ஸ் 

ஆண் 1 புலர்கின்ற பொழுது காட்டு
புன்னகைக்கும் பூ காட்டு
தலை தூக்கும் தளிர் காட்டு
தாவி வரும் அலை காட்டு
தமிழ் போல கொஞ்சுகின்ற நடை காட்டு
உள்ளத்தின் உரம் காட்டு திறம் காட்டு
நெஞ்சமெலாம் பொங்க ஆ... ஆ... ஆ...

கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே...

இசை பல்லவி

ஆண் 1 கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே
காலங்களை வென்றிடலாம் கண்ணின் மணியே
வடிக்கிற சிலைகளில் வாழ்வதெல்லாம்
ஆ... ஆ... ஆ... ஆ...
வடிக்கிற சிலைகளில் வாழ்வதெல்லாம்
துடிக்கின்ற இதயத்தின் உணர்வல்லவோ
தலமுறை பல கண்டு
தரணி போற்ற தருவோம் பல கலைகளிலே

கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே
காலங்களை வென்றிடலாம் கண்ணின் மணியே

இசை சரணம் - 1

ஆண் 1 சோழர் தம் கொடி மேவும் புலி காட்டு
ஆ... ஆ... ஆ... ஆ...
சோழர் தம் கொடி மேவும் புலி காட்டு ( இசை )

சேரன் கை வில் காட்டு இமை காட்டு ( இசை )

சோழர் தம் கொடி மேவும் புலி காட்டு
சேரன் கை வில் காட்டு இமை காட்டு
விழி காட்டு பாண்டியர் தம் கயல் காட்டு
மொழி காத்த தமிழ்ச் சங்கக் கலை காட்டு
விழி காட்டு பாண்டியர் தம் கயல் காட்டு
மொழி காத்த தமிழ்ச் சங்கக் கலை காட்டு
களம் வென்ற காளையரை
வாகை சூடி வரவேற்க்கும் பகை காட்டடி

கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே
காலங்களை வென்றிடலாம் கண்ணின் மணியே

இசை சரணம் - 2

ஆண் 1 உடல் உழைத்தும் களைக்காத
உழைப்பாளர் நிலை காட்டு

( வசனம் )

ஆண் 2 என்ன... 
நடனக் கலையில் இல்லாத பாவத்தை
சொல்லி விட்டேன் என்று பார்க்கிறாயா

( பாடல் )

ஆண் 1 பதம் சலிக்க சலியாத ஜதியோடு நடை போடு
பதம் விளங்க பொருள் கூறும் 
முக பாவம் தனைக் காட்டு
பதம் சலிக்க சலியாத ஜதியோடு நடை போடு
பதம் விளங்க பொருள் கூறும் 
முக பாவம் தனைக் காட்டு
ஆனந்த சௌந்தர்யம் அழகூட்டும் சிருங்காரம்
ஆச்சர்ய அனவரதம் அகோர கோர சங்காரம்
கொங்கைகள் ஆட குழல் மலராட
சலங்கைகள் ஆட சதுர் மறை ஆட
கனக மணிகளொடு கை வளை குலுங்கிட
இமைகள் இமைக்க மறந்திதயங்கள் மயங்கிட

தத்தித் தகஜுணு தித்தித் தகஜுணு 
தளாங்கு தரிகிட தோம்
தித்தித் தகஜுணு தகதித் தகஜுணு 
தளாங்கு தரிகிட தோம்
தத்தித் தகஜுணு தித்தித் தகஜுணு 
தளாங்கு தரிகிட தோம்
தரிகிட தோம் தா 
தரிகிட தோம் தரிகிட தோம் தா 
தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தா 

கல்லில் உயிர் காட்டிடலாம் கன்னி மயிலே
காலங்களை வென்றிடலாம் கண்ணின் மணியே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1