enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  பூங்குயிலே பூங்குயிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு பூங்குயிலே பூங்குயிலே    திரைப்படம் கும்மி பாட்டு 
கதாநாயகன் பிரபு  கதாநாயகி தேவயாணி 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கஸ்தூரி ராஜா  
இயக்குநர் கஸ்தூரி ராஜா   ராகம்  
வெளியானஆண்டு 1999  தயாரிப்பு விஜயலஷ்மி கஸ்தூரி ராஜா 

இசை பல்லவி

பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதி எல்லாம் சொல்லி விடவா
ஏத்தி வெச்ச பாரங்கள எறக்கி வெக்க வேணுமடி
என் கவல ஒனக்கு புரியுமா சொல்லம்மா
ஆராரோ ஆரிரரோ ஆராரிரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரிரோ

பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதி எல்லாம் சொல்லி விடவா

இசை சரணம் - 1

முத்துமணி பவழமுன்னு 
கொஞ்சிக் கொஞ்சி வளத்த மகன்
வேதனையில் வாடலாகுமோ
செல்லச் செல்லப் பிள்ளையின்னு
சொல்லிச் சொல்லி வளத்த மகன்
சொந்தம் இன்றி வாழலாகுமோ
தாய் மடியில் வந்த சுகம் தாயோடு போனதம்மா
வேறு வழி வந்த சொந்தம் வெறும் கதை ஆனதம்மா
தாய் கொடுத்த அன்பின் வரம் யார் தருவார்
என் தாய் மறைந்த துன்பத்த தான் யார் குறைப்பார்
அட தாய் தந்த பாசத்தை ஈடு செய்ய யாரும் இல்லையே

பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதி எல்லாம் சொல்லி விடவா

இசை சரணம் - 2

ஏர் உழுது போட்ட மண்ணு நீரு வர காஞ்சது போல்
தாய் அன்புக்கு ஏங்குறேனடி
ஊருவலமாக வந்து தாய் எரிஞ்ச தீயிக்குள்ளே
எம் மனசு சாம்பலாச்சடி
வந்த வழி மட்டும் சுத்தம் வாழ்ந்த வழி எல்லாம் குத்தம்
தாய் இருந்து வளத்திருந்தா ஏதம்மா இந்த யுத்தம்
நான் நடந்த பாதை எல்லாம் காட்டு முள்ளு
நான் ஊர் பழிய வாங்கும் சொமதாங்கிக் கல்லு
அட நல்லது கெட்டது நியாயத்த
சாமியக் கேட்டுச் சொல்லுங்க

பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதி எல்லாம் சொல்லி விடவா
ஏத்தி வெச்ச பாரங்கள எறக்கி வெக்க வேணுமடி
என் கவல ஒனக்கு புரியுமா சொல்லம்மா
ஆராரோ ஆரிரரோ ஆராரிரோ
ஆராரோ ஆரிரரோ ஆராரிரோ

பூங்குயிலே பூங்குயிலே கத சொல்லவா
சொல்லாத சேதி எல்லாம் சொல்லி விடவா

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1