enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  அக்கா நீ சிரிச்சா English | tamil | To Print
பாடல் தலைப்பு அக்கா நீ சிரிச்சா    திரைப்படம் கிழக்கும் மேற்கும் 
கதாநாயகன் நெபோலியன் - நாசர்  கதாநாயகி தேவயானி / கீதா 
பாடகர்கள்   பாடகிகள் பவதாரணி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாசன்  
இயக்குநர் களஞ்சியம்   ராகம்  
வெளியானஆண்டு 1998  தயாரிப்பு தெய்வானை மூவி இன்டர்நேசனல் 

அக்கா நீ சிரிச்சா போதும்...
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்...

இசை பல்லவி

அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்
அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்
சொந்தம் உள்ள வாச முல்ல
சோகம் என்ன கண்ணுக்குள்ள
வண்ணப் பூக்கள் இங்கே இருக்கு
நல்ல நாட்கள் வரும் நமக்கு
நீ வெள்ள மனம் படச்ச மேகமே
இங்கு நான் இருக்க எதுக்கு சோகமே

அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்
அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்

இசை சரணம் - 1

தடுத்து இருக்கும் முட்ட ஓடு தான்
குத்தி ஒடச்சு வெளியே வரும் கோழிக் குஞ்சு
மழைய தடுக்க ஒரு கூட தான்
மெல்ல முயன்று கட்டிக் கொள்ளும் மைனா குஞ்சு
நிமிர்ந்து நாம் நடையை போட்டால்
நெருஞ்சி முள் பூவாய் மாறும்
முயன்று நாம் நீச்சல் போட்டால்
கடலும் ஓர் வாய்க்கால் ஆகும்
மேலே ஒரு ஆகாசம் கீழே ஒரு பூமி உண்டு
மேலும் என்ன ஆனாலும் காத்து நிக்க சாமி உண்டு
தாயாக மாறி தாலாட்டுவேன்
சீர் தந்து உன்ன சீராட்டுவேன்
சந்தோஷத் தேரில் ஏத்துவேன் 

ஹேய் அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்

இசை சரணம் - 2

ஒனக்கும் எனக்கும் இந்த ஊருல
நல்ல உறவு என்று சொல்ல யாரும் இல்ல
உலகம் முழுக்க பெரும் நோயில
நாம் தனிச்சு தவிக்கிற நாரை இல்ல
உயிருக்கும் வெளையிற பயிர்க்கும்
பூமி தான் நம்ம அம்மா
துன்பமே ஏழைக்கு என்றும்
சொந்தமாய் ஆகாதம்மா
வந்த வழி போவதுண்டோ 
வானம் சென்று சேர்வதுண்டோ
சூரியனும் சோர்வதுண்டோ
சோர்ந்து நின்னா ஆவதுண்டோ
தாயாக மாறி தாலாட்டுவேன்
சீர் தந்து உன்ன சீராட்டுவேன்
சந்தோஷத் தேரில் ஏத்துவேன் 

அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்
அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்
சொந்தம் உள்ள வாச முல்ல
சோகம் என்ன கண்ணுக்குள்ள
வண்ணப் பூக்கள் இங்கே இருக்கு
நல்ல நாட்கள் வரும் நமக்கு
நீ வெள்ள மனம் படச்ச மேகமே
இங்கு நான் இருக்க எதுக்கு சோகமே

அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்
அக்கா நீ சிரிச்சா போதும்
இந்தச் சின்னத் தம்பி எனக்கென்ன வேணும்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1