enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  காலி பெருங்காய டப்பா English | tamil | To Print
பாடல் தலைப்பு காலி பெருங்காய டப்பா    திரைப்படம் மந்திர புன்னகை 
கதாநாயகன் சத்யராஜ்  கதாநாயகி நதியா 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் இளையராஜா  
இயக்குநர் வி. தமிழழகன்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு சத்யா மூவீஸ் 

காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு

இசை பல்லவி

காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு
வெறும் காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு
தேகம் அது சந்தேகம்
இந்தக் காயம் அது வெங்காயம்
அட வாழ்க்கை என்பதும் தேகம் என்பதும்
பாசம் என்பதும் ஒண்ணும் இல்ல

காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு

இசை சரணம் - 1

ஒடம்புல ரத்தம் இப்போ 
ஓடிக்கிட்டே தான் இருக்கு
அது என்னால ஓடவில்ல
இதயமோ எப்போதுமே 
துடிச்சுகிட்டே தான் இருக்கு
அது என்னால துடிக்கவில்ல
அன்பால துடிக்குது எத்தன நெஞ்சு
ஆசையால தவிக்குது எத்தன நெஞ்சு
அட அடிச்சாலும் துடிச்சாலும்
வாழ்க்கை என்பது ஒண்ணும் இல்ல

காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு

இசை சரணம் - 2

எனக்கொரு பூமி இருக்கு 
நடக்க கெடக்க படுக்க
அது எல்லார்க்கும் உள்ளதம்மா
நான் ஒரு தனி மரம் போல் 
தவிச்சு தள்ளாடி விழுவேன்
அது எப்போதும் நடக்குமம்மா
பட்டுப் போகும் மரத்தில் 
ஒரு பூங்கொடியத் தான்
படர விட்டு அழகு பார்க்கும் பாவி இறைவா
அட படருகின்ற பூங்கொடியும் 
பட்டுப் போகும் உண்மை இது

காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு

இசை சரணம் - 3

படிக்கிற படிப்பு எல்லாம் 
வாழ்க்கைக்கு எங்கே உதவும்
அப்போ கல்வியால என்ன நன்ம
கெடச்சது பணம் மட்டும் தான் 
உண்மைக் கல்வி இதுவா
இந்த அனுபவம் தான் உண்ம
டாக்டர் பட்டம் வாங்கி வெச்சேன் 
என்ன ஆனது
டாக்டருக்கும் டாக்டர் தேடும் 
உடம்பு தான் இது
அட கூட்ட விட்டு போற உசுர 
புடிச்சு வெக்க முடியலியே

காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு
தேகம் அது சந்தேகம்
இந்தக் காயம் அது வெங்காயம்
அட வாழ்க்கை என்பதும் தேகம் என்பதும்
பாசம் என்பதும் ஒண்ணும் இல்ல

காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு
காலி பெருங்காய டப்பா
அதுல வாசன பலமா தான் இருக்கு

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1