enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆலோலம் பாடும் தென்றலே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆலோலம் பாடும் தென்றலே    திரைப்படம் சிறையில் பூத்த சின்ன மலர் 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி பானுப்ரியா 
பாடகர்கள் மனோ  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பி.அமிர்தம்   ராகம்  
வெளியானஆண்டு 1990  தயாரிப்பு ஸ்ரீ திருமலா ஆர்ட் புரொடக்சன்ஸ் 

ஆண் ஆலோலம் பாடும் தென்றலே ( இசை )

ஆகாயம் தேடும் திங்களே

இசை பல்லவி

ஆண் ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே
வட்ட வட்டப் பொட்டு வைத்து
வண்ண வண்ணப் பூ முடிக்க வா
சின்னச் சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா

ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

இசை சரணம் - 1

ஆண் உச்சி வெயில் சூடு பட்டு 
வங்கக் கடல் காய்வதில்லை
வீசும் புயல் காற்றடித்து 
வெள்ளி மலை சாய்வதில்லை
சந்திரனைப் போல இங்கு 
சூரியனும் தேய்வதில்லை
மானிடரைப் போல இங்கு 
காதல் என்றும் மாய்வதில்லை
நேச மனம் சேர்ந்திருக்க 
காசு பணம் கேட்குமா
பேசுகின்ற பேதம் எல்லாம் 
பாசங்களை தாக்குமா
வாழலாம் கூட வா வாழலாம் கூட வா
நாளெலாம் நான் சூடும் பூவே

ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

இசை சரணம் - 2

பெண் உன்னை ஒரு நாள் மறந்து 
என் மனது வாழ்ந்ததில்லை
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம் 
உன்னை அன்றி வேறு இல்லை
பொன்னை அள்ளி நான் கொடுக்க
என்னிடத்தில் ஏதும் இல்லை
என்னை அள்ளி நான் கொடுத்தேன்
உன்னுடைய கைகளிலே
கண் இரண்டில் காதல் என்னும்
கோட்டை கட்டி வாழ்கிறேன்
ஊரறிய மாலை இட்டு
உன் மடியில் சேர்கிறேன்
காலமே கூடலாம் காலமே கூடலாம்
மார்பிலே நான் மஞ்சம் போட

ஆண் ஆலோலம் பாடும் தென்றலே

பெண் ஆகாயம் தேடும் திங்களே

ஆண் வட்ட வட்டப் பொட்டு வைத்து
வண்ண வண்ணப் பூ முடிக்க வா

பெண் சின்னச் சின்ன கன்னங்களில்
உண்ணுகின்ற தேனெடுத்து வா

இருவர் ஆலோலம் பாடும் தென்றலே
ஆகாயம் தேடும் திங்களே

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1