enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உலகம் சுத்துதடா English | tamil | To Print
பாடல் தலைப்பு உலகம் சுத்துதடா    திரைப்படம் கரிமேடு கருவாயன் 
கதாநாயகன் விஜயகாந்த்  கதாநாயகி நளினி 
பாடகர்கள் மலேசியா வாசுதேவன் - கங்கை அமரன் - தீபன் சக்ரவர்த்தி  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வைரமுத்து  
இயக்குநர் ராம நாராயணன்   ராகம்  
வெளியானஆண்டு 1985  தயாரிப்பு மீனாட்சி 

பல்லவி

ஆண் 1 உலகம் சுத்துதடா இடம் இருக்கு வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா 
இது வரையில் பொதுவாக

ஆண் 2 எப்பாடு பட்டாலும் திருந்தாது பூமி

ஆண் 3 அட எக்கேடு கெட்டாலும் நமக்கேண்டா சாமி

ஆண் 2 சொன்னாலே பொல்லாப்பு வேனாண்டா வீண் வம்பு

குழு உலகம் சுத்துதடா இடம் இருக்கு வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா 
இது வரையில் பொதுவாக ஹேய் ( இசை )

தன்னன்னா தன்னன்னா தன்னன்னா னா
தன்னன்னா தன்னன்னா தன்னன்னா

இசை சரணம் - 1

குழு ஆஹஹா ஆஹஹா
தன்னானா தன்னா னானா
தன்னானா தன்னா னானா

ஆண் 1 தெருவோரம் தெனம் தோறும் மேட போட்டு
அரிச்சந்திரா ஸ்ரீ வள்ளி ஆடிப் பாத்தோம்

ஆண் 3 ஏ அப்படிப் போடு 

ஆண் 2 எப்படி

ஆண் 3 ஏ அசக் ஏ அசக்

ஆண் 2 கிட்டப்பா சின்னப்பா மெட்டுப் போட்டு
தில்லானா தெம்மாங்கு பாடிப் பாத்தோம்

ஆண் 3 எல்லார்க்கும் சேதி சொன்னோம்
அட ஒண்ணா ரெண்டா 
எத்தனையோ நீதி சொன்னோம்

ஆண் 2 அண்ணாச்சி என்ன ஆச்சு
எல்லோருக்கும் கொட்டாவி வந்து போச்சு

குழு நாய் வால நேராக்க யாரால ஆகும்
ஊர் போற போக்கோட போனா தான் தோதாகும்

உலகம் சுத்துதடா இடம் இருக்கு வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா 
இது வரையில் பொதுவாக

சரணம் - 2

ஆண் 1 எதுலேயும் எங்கேயும் ஊழல் என்று
இப்போது கூப்பாடு போடுவேன் நான்

ஆண் 3 அட ஆமா சாமி அட அடிச்சு உடு

ஆண் 1 நானே தான் ஒரு நாளில் மந்திரி ஆனா
அதையே தான் தப்பாம பண்ணுவேன் நான்

ஆண் 2 நல்லவங்க யாரும் இல்ல
இந்தியாவில் அப்படி ஓர் ஊரும் இல்ல

ஆண் 3 அண்ணாத்த சொன்ன சொல்ல
காக்குறவன் முன்னேறி வந்ததில்ல

குழு நான் சொல்லி நீ சொல்லி எவன் கேக்கப் போறான்
எல்லாரும் நிர்வாணம் நமக்கேண்டா புது வேட்டி

ஆண் 1 உலகம் சுத்துதடா இடம் இருக்கு வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா 
இது வரையில் பொதுவாக ஹெஹேய்

இசை சரணம் - 3

ஆண் 1 அண்ணன் நான் பாஞ்சாலி நாடகம் பாத்து
அஞ்சு பேர பெண்ணொருத்தி தேடிப் போனா

ஆண் 3 ஆ ஜீயா ஜிக்கா ஆ ஜிக்கா ஜிக்கா

ஆண் 2 கண்ணகியின் நாடகத்த பாத்தவன் தானே
மாதவியின் வீட்டுக்குள்ளே ஓடிப் போனான்

ஆண் 3 கள்ளோட பால வெச்சா
நம்ம சனம் கள்ளத் தானே அள்ளிக் குடிக்கும்

ஆண் 2 ஃபுல்லோட பூவ வெச்சா
நம்ம சனம் ஃபுல்லத் தானே அள்ளிக் குடிக்கும்

குழு ஒரு நாளும் ஒரு போதும் திருந்தாத நாடு
நெல மாறிப் போகாது நமக்கேண்டா வீண் பாடு

உலகம் சுத்துதடா இடம் இருக்கு வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா 
இது வரையில் பொதுவாக ஹெஹேய்

ஆண் 2 எப்பாடு பட்டாலும் திருந்தாது பூமி

ஆண் 3 அட எக்கேடு கெட்டாலும் நமக்கேண்டா சாமி

ஆண் 2 சொன்னாலே பொல்லாப்பு வேனாண்டா வீண் வம்பு

குழு உலகம் சுத்துதடா இடம் இருக்கு வலமாக
ஒரு வார்த்தை இல்லையடா 
இது வரையில் பொதுவாக ஹேய்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1