enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  இவள் தானே பெண்மணி English | tamil | To Print
பாடல் தலைப்பு இவள் தானே பெண்மணி    திரைப்படம் பெரியம்மா 
கதாநாயகன் நெப்போலியன்  கதாநாயகி பானுமதி 
பாடகர்கள் இளையராஜா  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் பானுமதி   ராகம்  
வெளியானஆண்டு 1993  தயாரிப்பு பரணி பிக்சர்ஸ் 

இவள் தானே பெண்மணி எல்லோர்க்கும் கண்மணி
ராத் தாத்தாத்த ராத் தாத்தாத்த ராத்தா...
ரர ராத் தாத்தாத்த ராத் தாத்தாத்த ரா... ( இசை )

தர ரரரா ராரார ரர ரரரா ராரா
ரரத் தாத்தாத்த ரா ரரத் தாத்தாத்த ரம்பம்

இசை பல்லவி

இவள் தானே பெண்மணி எல்லோர்க்கும் கண்மணி
சொன்னானே பாரதி இவள் அந்த மாதிரி
எவரும் உலகிகிலே தவறு செய்கையில்
எதிர்க்க நினைப்பவள்
இழுத்துப் பிடித்துத் தான் இரண்டு தாடையில்
கொடுக்கத் துடிப்பவள்

இவள் தானே பெண்மணி எல்லோர்க்கும் கண்மணி
சொன்னானே பாரதி இவள் அந்த மாதிரி

இசை சரணம் - 1

பருவத்தில் இள மாது பயணத்தில் வரும் போது
உரசிடும் சில பேரை இவளுக்குப் பிடிக்காது
இரு விழி சிவப்பாக நெருப்பெனெவே காய்வாள்
புடவையில் நடமாடும் புலி எனவே பாய்வாள்
தாய்க் குலத்தை கேலி செய்யும் 
நாய்க் குலத்தைக் கண்ட உடன் முறைப்பாளே
தட்டிக் கேட்க யாரும் இன்றி
சுற்றுகின்ற ஆணவத்தை உடைப்பாளே
பாக்கெட்டிலே கையை விடும்
போக்கிரியைப் பார்த்த உடன் பிடிப்பாளே
கண்டிக்கவும் தண்டிக்கவும் 
காவல் துறை கைகளிலே கொடுப்பாளே
ஊருக்குழைக்க இங்கு உண்மை பிழைக்க
நல்ல இதயம் படைத்த புதிய பிறவி தான்

இவள் தானே பெண்மணி எல்லோர்க்கும் கண்மணி
சொன்னானே பாரதி இவள் அந்த மாதிரி

இசை சரணம் - 2

அடுத்தவர் நலம் தன்னை நினைப்பதில் இவள் அன்னை
கெடுப்பவர் தம்மை மோதி ஜெயிப்பதில் சண்டி ராணி
மணமகனின் தேவை பணம் இல்லை என்று சொல்வாள்
மணமகன் பணம் கேட்டால் விலை மகன் இவன் என்பாள்
பேரம் பேசி மாலை இடும்
பேடிகளை காலடியில் மிதிப்பாளே
காதல் கொண்டு கைப் பிடிக்கும்
காளையரை கன்னியரை மதிப்பாளே
நீதி நெறி காத்து நிற்கும் 
ஆதி சக்தி போல இவள் உதிப்பாளே
அன்பு கொண்ட பண்பு கொண்ட
மக்களையே தெய்வம் என்று துதிப்பாளே
ஈரம் இருக்கும் நெஞ்சில் வீரம் இருக்க
இவள் நினைத்த எதையும் நடத்தி முடிப்பவள்

இவள் தானே பெண்மணி எல்லோர்க்கும் கண்மணி
சொன்னானே பாரதி இவள் அந்த மாதிரி
எவரும் உலகிகிலே தவறு செய்கையில்
எதிர்க்க நினைப்பவள்
இழுத்துப் பிடித்துத் தான் இரண்டு தாடையில்
கொடுக்கத் துடிப்பவள்

இவள் தானே பெண்மணி எல்லோர்க்கும் கண்மணி
ரர ரரத் தாத்தாத்த ரர ரர ரர
ரிர ரரத் தாத்தாத்த ரர ரரப் பாப்ப பம்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1