enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  மயிலே மயிலே English | tamil | To Print
பாடல் தலைப்பு மயிலே மயிலே    திரைப்படம் கடவுள் அமைத்த மேடை 
கதாநாயகன் சிவகுமார்  கதாநாயகி சுமித்ரா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.பி.சைலஜா 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்   ராகம்  
வெளியானஆண்டு 1979  தயாரிப்பு திரிசூல் ஃபிலிம்ஸ் 

இசை பல்லவி

ஆண் மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ 
தளிருடல் தொடலாமோ

மயிலே மயிலே... மயிலே மயிலே... 

பெண் மயிலே மயிலே உன் தோகை இங்கே
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே
ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

மயிலே மயிலே... மயிலே மயிலே... 

இசை சரணம் - 1

ஆண் தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க
தென்றல் தாலாட்ட தென்னை இருக்க
அது தன்னை மறக்க

பெண் நீ அணைக்க நான் இருக்க நாள் முழுக்க தேனளக்க

ஆண் பனிவாய் மலரே பல நாள் நினைவே
வரவா தரவா பெறவா நான் தொடவா

பெண் மயிலே மயிலே உன் தோகை இங்கே

ஆண் ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

பெண் ஒரு சொந்தமில்லையோ உறவுகள் வளராதோ
நினைவுகள் மலராதோ

ஆண் மயிலே மயிலே... மயிலே மயிலே... 

இசை சரணம் - 2

பெண் மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க
மஞ்சள் மாங்கல்யம் மன்னன் வழங்க
கெட்டி மேளம் முழங்க

ஆண் பூங்குழலில் தேனருவி தோளிரண்டும் நான் தழுவி

பெண் வரும் நாள் ஒரு நாள் அது தான் திருநாள்
உறவாய் உயிராய் நிழலாய் நான் வருவேன்

ஆண் மயிலே மயிலே உன் தோகை இங்கே

பெண் ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே

ஆண் குளிர் காலமல்லவோ தனிமையில் விடலாமோ 
தளிருடல் தொடலாமோ

பெண் மயிலே மயிலே... மயிலே மயிலே... 

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1