enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உன்னை தொட்ட காற்று வந்து English | tamil | To Print
பாடல் தலைப்பு உன்னை தொட்ட காற்று வந்து    திரைப்படம் நவக்கிரஹம் 
கதாநாயகன் முத்துராமன் - சிவகுமார்  கதாநாயகி ல‌ஷ்மி 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் வி.குமார்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் கே.பாலசந்தர்   ராகம்  
வெளியானஆண்டு 1970  தயாரிப்பு ஏ. வி. எம். ஸ்டுடியோ 

ஆண் ஆஹாஹா... ஆஹாஹா...  
ம்ஹும் ஹும்... ம்ஹும் ஹும்... 
ஆ... ஹா... ஹா...

இசை பல்லவி

பெண் உன்னைத் தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டது
உன்னைத் தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று 
கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

உன்னைத் தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டது

இசை சரணம் – 1

பெண் உன் பாதம் தொட்ட அலைகளே 
என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது

ஆண் ஆஹாஹா... ஆஹாஹா...  
ஓஹோஹோ ஹா ஆ... ஆ...

பெண் உன் பாதம் தொட்ட அலைகளே 
என் பாதம் தொட்டது
நம் இருவரையும் ஒன்று சேர்க்க பாலம் இட்டது
இந்த நேரம் பார்த்து நாணம் வந்து 
கோலம் இட்டது
கொஞ்ச நாள் வரையில் பொறுத்திருக்க 
ஆணை இட்டது

ஆண் அஹஹா ஒஹொஹோ ம்ஹுஹும் லலலா

பெண் உன்னைத் தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டது
அதுவே போதும் என்று பெண்மை இன்று 
கேட்டுக் கொண்டது

இசை சரணம் – 2

பெண் மழைத் தூறல் போட்டு சாரல் வந்து 
உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது 
என்னை நனைத்தது

ஆண் ஆஹாஹா ஓஹோஹோ 
ஓஹோஹோ ஆஹாஹா

பெண் மழைத் தூறல் போட்டு சாரல் வந்து 
உன்னை நனைத்தது
அது உன்னை நனைத்து தெறித்த போது 
என்னை நனைத்தது
அது துளித் துளியாய் எனது தோளில் 
இடம் பிடித்தது
இந்த இயற்கை எல்லாம் இருவரையும் 
இணைத்துப் பார்க்குது
அதுவே போதும் என்று பெண்மை இன்று 
கேட்டுக் கொண்டது
வரலாம் தொடலாம் மண நாள் வரும் போது
தருவேன் பெறலாம் பக்கம் நீ வரும் போது

உன்னைத் தொட்ட காற்று வந்து 
என்னைத் தொட்டது
Typed By : Jayanthi Seshadri

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1