enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆயிரம் ஆயிரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆயிரம் ஆயிரம்    திரைப்படம் சொந்தம் 16 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி கல்யாணி 
பாடகர்கள் மனோ  பாடகிகள் வாணி ஜெய்ராம் 
இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் டி. எஸ். கிருஷ்ண குமார்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு Sri Durga Films 

இசை பல்லவி

ஆண் ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

பெண் பாடங்கள் சொல்வேன் இப்போது
பாட்டியின் சொல்லோ தட்டாது

ஆண் நீ தான் பிறந்த நாள் பார்த்து
தாத்தா தந்தேன் நல் வாழ்த்து

குழு வாழ்வினில் வீசட்டும் ஆனந்தப் பூங்காற்று

ஆண் ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

இசை சரணம் - 1

ஆண் ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோ
மல்லிகைப் பூவோடு அல்வா தான்
மனைவிக்கு வாங்கி தந்தால் தான்
தாரமும் வீட்டுல தங்கிடுவா
இல்லையேல் கம்பிய நீட்டிடுவா ( இசை )

பாத்துக்க நீ இந்த அப்பாவத் தான்
கணக்குகள் போட்டவர் தப்பாகத் தான்

பெண் நீ இங்கு எப்பவும் அம்மா புள்ள
அப்பனப் போல் ஒரு முட்டாள் இல்ல

ஆண் கூட்டுக் குடும்பம் கொடுத்திடும் இன்பம்
நான் பெற்ற மகளே கேட்டுக்கடி
வீட்டுக்கு அழகு சேர்ப்பது உறவு
காதுல நீ இத போட்டுக்கடி

ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

இசை சரணம் - 2

பெண் நடக்கணும் உங்க கன்னாலம்
தடுக்குறதாரு கஸ்மாலம்
ஊர்கோலம் உட்டாக்கா முன்னால நின்னு
வெப்பேன் நானும் புஸ்வானம் ( இசை )

முழிக்கிறதேண்டா பேமானி
இவளுக்கு இனிமே மாமா நீ
ஊடால கொண்டாட ஒண்ணாக துன்னு
சிக்கன் மட்டன் பிரியாணி ( இசை )

ஆண் ஏண்டி போ சோத்துக்கட
சாயங்கள் வெளுத்திடும் வாய் மூடு

பெண் பூவு வெச்சு பொட்டு வெச்சு
வாழணும் சுந்தரி பல்லாண்டு

ஆண் ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

இசை சரணம் - 3

ஆண் ஓஹோ ஹோஹோ ஹோஹோஹோ
இத்தனை சொந்தமும் சேரத் தான்
நான் பட்ட பாடுகள் கூறத் தான் ( இசை )

வம்புகள் வந்திடும் வரதப்பா
பேசுவதேண்டா படு தப்பா ( இசை )

பெண் சொப்பன சுந்தரி வந்தாளப்பா
ஜாடையில் சம்மதம் தந்தாளப்பா
மாலையும் போடுற நாள் பாத்துத் தான்
மாலையில் நடக்கணும் என் கூத்துத் தான்

ஆண் நீ இந்த நேரம் நான் கொண்ட தாரம்
நாட்டியம் நாடகம் தேவை இல்லே
ஆடுற காலும் பேசுற வாயும் 
நான் பெத்த பொண்ணுக்கு என்றும் இல்லே

ஆயிரம் ஆயிரம் செலவுகள் செய்வேன்
சுந்தரி உனக்காக
ஆரம்பம் ஆனது இருபது வயசு
இந்நாள் அதற்காக

பெண் பாடங்கள் சொல்வேன் இப்போது
பாட்டியின் சொல்லோ தட்டாது

ஆண் நீ தான் பிறந்த நாள் பார்த்து
தாத்தா தந்தேன் நல் வாழ்த்து

குழு வாழ்வினில் வீசட்டும் ஆனந்தப் பூங்காற்று
வாழ்வினில் வீசட்டும் ஆனந்தப் பூங்காற்று
வாழ்வினில் வீசட்டும் ஆனந்தப் பூங்காற்று

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1