enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  மாமா மாலை நேரம் English | tamil | To Print
பாடல் தலைப்பு மாமா மாலை நேரம்    திரைப்படம் அம்பிகை நேரில் வந்தாள் 
கதாநாயகன் மோகன்  கதாநாயகி ராதா 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் எம். ஜி. வல்லபன்  
இயக்குநர் மணிவண்ணன்   ராகம்  
வெளியானஆண்டு 1984  தயாரிப்பு ராம் ஆர்ட்ஸ் 

இசை பல்லவி

மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம் 
லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும் 
அழகு கோடி பொன்னாகும் 
தழுவும் போது அமுதம் ஊறும் 
அழகு கோடி பொன்னாகும் 

லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்

இசை சரணம் - 1

மனதை இழுக்கும் பார்வை போட்டு
மடியில் இருந்து வாழ்ந்திடு
மறு நாள் விடியும் பொழுதைப் பார்த்து
மயக்கம் தெளிந்து எழுந்திடு
இளமை என்னும் வீணை மீட்டு
இதமாய் என்னை நீ தொடு
இடையில் ஏதும் தடைகள் என்றால்
இரண்டோ மூன்றோ நீ கொடு
என்னோடு தான் என்றென்றுமே நீராடிடு
இன்பங்களின் சொந்தங்களை நீ அள்ளப் போராடிடு

லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்

இசை சரணம் - 2

உலகை மறந்து உறவை மறந்து மனது திறந்து பாடிடு
உனக்கும் எனக்கும் கிடைக்கும் சுகத்தை
உணரும் வரைக்கும் ஆடிடு
பசியை தீர்க்கும் உணவை உண்டு
மேலும் மேலும் பசித்திரு
பருவம் என்னும் மேடை வந்த பாவை என்னை ரசித்திரு
கண் மூடினால் வேறென்ன தான் நீ பார்ப்பது
காதல் சுகம் ஆசைகளை நீ கண்டு வாழ்ந்திடு

லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்
தழுவும் போது அமுதம் ஊறும் 
அழகு கோடி பொன்னாகும் 

லலலல மாமா மாலை நேரம் உனது யோகம் ஆனந்தம்

Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1