enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உறவுகள் தொடர் கதை English | tamil | To Print
பாடல் தலைப்பு உறவுகள் தொடர் கதை    திரைப்படம் அவள் அப்படித் தான் 
கதாநாயகன் கமல் ஹாசன் - ரஜினிகாந்த்  கதாநாயகி ஸ்ரீபிரியா 
பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் கங்கை அமரன்  
இயக்குநர் சி. ருத்ரையா   ராகம்  
வெளியானஆண்டு 1978  தயாரிப்பு குமார் ஆர்ட்ஸ் 

இசை பல்லவி

உறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம்... சுகமே...

இசை சரணம் - 1

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமை தாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும் பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்

உறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம்... சுகமே...

இசை சரணம் - 2

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம் 
நாளொன்றிலும் ஆனந்தம்
நீ கண்டதோ துன்பம் 
இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுக ராகமே ஆரம்பம்
நதியிலே புதுப் புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது
இன்பம் பிறந்தது

உறவுகள் தொடர் கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம்
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனியெல்லாம்... சுகமே... இனியெல்லாம்... சுகமே...


Uploaded By: ashraf
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1