enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆளப்பொறந்த ராஜன்பாடு English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆளப்பொறந்த ராஜன்பாடு    திரைப்படம் ராஜராஜன் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி பத்மினி 
பாடகர்கள் திருச்சி லோகநாதன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன்   பாடலாசிரியர்கள் முத்துக்கூத்தன்  
இயக்குநர் டி.ஆர்.சுந்தரம்   ராகம்  
வெளியானஆண்டு 26-04-1957  தயாரிப்பு நீலா புரொடக்ஷ்ன்ஸ் 
                   ஆளப்பொறந்த ராஜன்பாடு  

                                   ( இசை )       

பெண் ஆளப் பொறந்த ராஜன் பாடு திண்டாட்டமய்யா 
         டியாலோ திண்டாட்டமய்யா
        இப்போ அடுத்துக் கெடுத்த மந்திரிக்கி 
        கொண்டாட்டமய்யா  
        இப்போ கொண்டாட்டமய்யா
        அபேலே ராஜா கேளு சுபேலே ராஜா அய்சா  
        அபேலே ராஜா கேளு சுபேலே ராஜா
 
ஆண் 1 மூளையிருந்தும் ராஜாக் குட்டி 
        மோசம் போனான்டி 
        ராஜா மோசம் போனான்டி
        முட்டாத்தனமா ராஜ்ஜியத்தைக் 
        கோட்டை விட்டான்டி 
        ராஜா கோட்டை விட்டான்டி
        அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே அய்சா
        அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே

பெண் குயிலுக் கூட்டில் கோட்டான் இப்போ 
        குடியிருக்குதய்யா 
        கோட்டான் குடியிருக்குதய்யா
 
ஆண் 1 ஆடும் மயிலைப் போல வேஷம் போட்டு 
        மந்தி நடிக்குதடி
        பாத்து சந்தி சிரிக்குதடி

        அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே அய்சா
        அபேலு மயிலே கேளடி சுபேலு மயிலே

        ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய் ஹா ஹேய் 

ஆண் 2 அவ‌லக்ஷண ராஜா போல
        ஆள வந்தவன்டி
        ஓ ஆந்தைக் கண்ணன் ராஜ முழி
        முழிக்கப் பாத்தவன்டி 
        அது வெளியே தெரிஞ்சுப் போச்சு
        அவன் வேஷங் கலையலாச்சு 
        ஓ விடியுமுன்னே வேலையை முடிப்போம்
        வெத்தலைச் சருவைப் போட்டுக்க போட்டுக்க 
        போட்டுக்க... 
ஆண் 1 வேட்டையாட வாரும் மன்னவா வன 
        வேட்டையாட வாரும் மன்னவா 
        கொடும் வேங்கைப் புலி யானை தன்னை 
        விரட்டியடித்துப் பிடித்து மகிழ 
        வேட்டையாட வாரும் மன்னவா 

        காட்டுப் பன்றிக் கூட்டம் தன்னைக் 
        கலைத்திடுவோம் சென்று
        கரடி செந்நாய் மனிதக் குரங்கு 
        கதறிடக் கணை தொடுத்து நின்று  
        வேட்டையாட வாரும் மன்னவா  
ஆண் 2 ஆகா அப்படியே ஆகட்டும் மந்திரி 
        அடே யாரங்கே 

        காவலா நீ சென்று 
        ஆவனச் செய்திட வேண்டும் 
        மக்கள் கஷ்டத்தை மகராஜன் 
        நான் தீர்க்க வேண்டும் காவலா 
        தாவியோடி வேட்டையாட விலங்கு
        தலை தப்பினேனென்று ஓடுமேயங்கு
        தருணமிதே மிருக பயம் 
        தனையழிப்போம் மந்திரி
        தாமதமேன் கானகம் செலத்தடுப்பவர் 
        யார் எந்திரி 
பெண் ஆ பிராண நாதா 
        எங்கு செல்லுகின்றீர் இப்போது வேகமாய் 
        எங்கு செல்லுகின்றீர்
        சிங்காரவல்லிச் செந்தாமரையை நீரும் விட்டு 

        எங்கு செல்லுகின்றீர்  
ஆண் 2 துட்ட மிருகங்கள் கொட்டத்தையடக்கத்
        துரிதமாய் வனம் செல்லுகின்றேன் எனை
        விட்டு அந்தப்புரம் தொட்டு நடந்திடு
        வேட்டையாடி வந்து கொஞ்சுகின்றேன்
        ( வசனம் )
        பாவாய் நீ அந்தப்புரம் போவாய்
                          பாடல்

பெண் போகாதே போகாதே எந்தன் மன்னா 
        பிராண நாதா நேத்து
        பொல்லாத சொப்பனங் கண்டேனே நான் 
        அய்யோ பொல்லாத சொப்பனங் 
        கண்டேனே நான்  
        தேகம் நடுங்குது என் துரையே 
        எந்தன் மன்னா பெருந்தீங்கு செய்வானிந்த மந்திரியே 
        அய்யோ தீங்கு செய்வானிந்த மந்திரியே
ஆண் 2 மாதே நீ சொல்வதை நம்ப மாட்டேன் எந்தன்
        மந்திரி பேச்சையும் தட்ட மாட்டேன்
        மந்த மதி கொண்ட சுந்தராங்கி உன்னை
        மாட்டி வைத்தே சிறை பூட்டிடுவேன்

பெண்  ( வசனம் )
        அய்யோ சுவாமி காடுமலை 
        வன வனாந்திரங்களுக்கு  
        இந்த நன்றி கெட்ட மந்திரியோடு 
        தனியாகவா போகிறீர்கள்
        வேண்டாம் நாதா வேண்டாம் 

                தொகையறா
பெண் மந்திரிப் பேச்சைக் கேட்டு 
        மன்னவா காடு சென்றால்
        தந்திரமாக உமைத் தாக்கியே துரத்தி விட்டு 
        கேடு நீர் செய்ததாலே 
        கிடைத்தது சாவு என்று
        தேடுவோர் தமக்குக் சொல்லி 
        தேசத்தைக் கைக் கொள்வானே... ஏ... ஏ... ஏ... 
           பாடல்

பெண் கதைய முழுதும் சொல்லணும்
        டே மாமா டே புருஷா 
        டியாலிங்குற டியாசிங்கா
        கண்டிப்பா நான் தெரிஞ்சுக்க வேணும்

ஆண் தகடி புத்திக் கெட்ட போக்கிரிப்  பெண்ணே
        ஏ சிறுக்கி மேல்மினுக்கி 
        டியாலிங்குற டியாசிங்கி
        போவாம் வாடி என்னோட பின்னே

பெண் ஏ அம்மே ஏ ஆயி நான் மாட்டேன்

ஆண் நீ வாடி

பெண் நான் மாட்டேன்

ஆண் டகுடி டிங்குடி டாங்கு சுந்தரி 
        வாடி பின்னாலே

பெண் ஆத்தாடி டமுக்கு டிப்பா சிங்கா 
        கதையை சொல்லு முன்னாலே
 
ஆண் டகுடி டிங்குடி டாங்கு சுந்தரி 
        வாடி பின்னாலே

பெண் ஆத்தாடி டமுக்கு டிப்பா சிங்கா 
        கதையை சொல்லு முன்னாலே
 
ஆண் திம்திம் தத்தினதிம் தினதின தகதின திம் திம்திம் 
        அஃகூ அ அஃகூ அ அஃகூ அ அஃகூ

பெண் மக்களை ஏமாத்தி மந்திரி நாடாளும்  
        மர்மத்தை நீ சொல்லு சிங்கா அந்த
        மர்மத்தை நீ சொல்லு சிங்கா 

ஆண் அய்யோ மன்னன் தீங்கு செய்து 
        மாண்டானென்று சொல்லி
        மந்திரியாளுறான் சிங்கி நாட்டை
        மந்திரியாளுறான் சிங்கி 
பெண் முக்காடு போட்டுக் கழுத்தறுக்கும் அந்த
        மோசக்காரன் பேரை சொல்லு சிங்கா
        மோசக்காரன் பேரை சொல்லு

ஆண் அடியே முடியாது என்னாலே 
        பிடிவாதம் செய்யாதே
        முட்டாளே நீ எட்டி நில்லு எட்டி நில்லு
பெண் அட சும்மா சொல்லு சிங்கா நான்
        அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்குறேன்
        ஆபத்து வராமே காத்துக்குறேன்
 
ஆண் படமெடுத்து ஆடும் அந்த 
        பாம்புக்கென்ன பேரு
 
பெண் நாகம்

ஆண் ம்...
        வடமலையான் மருத வள்ளி 
        தெய்வயானை புருசன் நாம
        வணங்கும் அப்பன் சாமிக்கென்ன பேரு
 
பெண் வேலன் ஓ...
 
ஆண் ஸ்...

பெண் ஓ... நாக வேலன் நாகவேலன் உர்ர்ர்ர்ர்...
        கத்தியினாலே காரியம் சாதிக்க முடியாது 
        காரியம் முடியாது இந்த
        கத்தியை நம்பி வெகு நாள் வாழ்ந்தவர் 
        கிடையாது உர்ர்ர்ர்ர்...
        சத்திய தர்ம நீதி நியாயமே இல்லாது 
        நீதி இல்லாது ஆளும்
        சர்வாதிகார வெறியராட்சி இனி 
        செல்லாது உர்ர்ர்ர்ர்...
ஆண் ஒட்டாரம் பண்ணாதே ஒங்க காலம் பொல்லாதே
        ஊரு ஜனத்தைப் பகைச்சிகிட்டு
        ஒடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே நல்ல 
        ஒடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே உர்ர்ர்ர்...
இருவர் கத்தியினாலே காரியம் சாதிக்க முடியாது 
        காரியம் முடியாது இந்த
        கத்தியை நம்பி வெகு நாள் வாழ்ந்தவர் 
        கிடையாது 
        கத்தியினாலே காரியம் சாதிக்க முடியாது 
        காரியம் முடியாது இந்த
        கத்தியை நம்பி வெகு நாள் வாழ்ந்தவர் 
        கிடையாது

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1