enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஏமாற்றந்தானா என் வாழ்விலே English | tamil | To Print
பாடல் தலைப்பு ஏமாற்றந்தானா என் வாழ்விலே    திரைப்படம் சக்கரவர்த்தித் திருமகள் 
கதாநாயகன் எம்.ஜி.ஆர்  கதாநாயகி அஞ்சலிதேவி 
பாடகர்கள்   பாடகிகள் எஸ்.வரலட்சுமி 
இசையமைப்பாளர் ஜி.ராமநாதன்   பாடலாசிரியர்கள் கே.டி.சந்தானம்  
இயக்குநர் ப.நீலகண்டன்   ராகம்  
வெளியானஆண்டு 18.01.1957  தயாரிப்பு உமா பிக்சர்ஸ் 
        ஏமாற்றந்தானா என் வாழ்விலே

                            பல்லவி

ஏமாற்றந்தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனி மேலே

ஏமாற்றந்தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனி மேலே

           அனுபல்லவி
     
கோமகனை மணந்து குலவி மகிழ்வோம் என்று
கோமகனை மணந்து குலவி மகிழ்வோம் என்று
கொண்ட என் ஆசைக்கு தண்டனையோ
ஏமாற்றந்தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனி மேலே

இசை              சரணம் - 1   
                     
பசிக்கு உணவு தந்து புசிக்கும் முன்னே 
தட்டிப் பறிப்பது அழகாமோ 
பசிக்கு உணவு தந்து புசிக்கும் முன்னே 
தட்டிப் பறிப்பது அழகாமோ 
குழல் இசைக்கு மயங்கி வரும் 
பசுவைக் கல்லால் அடித்தல்
இசைக்கு மயங்கி வரும் 
பசுவைக் கல்லால் அடித்தல்
இரக்கத்தின் செயலாமோ இனி

ஏமாற்றந்தானா என் வாழ்விலே
இன்பமே வீசாதோ இனி மேலே 

இசை             சரணம் - 2  

கசக்கி எறியவோ மலர் கொய்வார்...
ஆ... ஆ... ஆ... 

கசக்கி எறியவோ மலர் கொய்வார் 
பெண் மேல்
களங்கம் சுமத்தவோ மணம் செய்வார் 
கசக்கி எறியவோ மலர் கொய்வார் 
பெண் மேல்
களங்கம் சுமத்தவோ மணம் செய்வார் 
உங்கள் நிஜ அன்பின் ருசி காண 
நினைந்தேங்கும் என் துயர்
நீங்குமா பெண் மனம் தாங்குமா 
உங்கள் நிஜ அன்பின் ருசி காண 
நினைந்தேங்கும் என் துயர்
நீங்குமா பெண் மனம் தாங்குமா சுவாமி 
ஏமாற்றந்தானா என் வாழ்விலே  
இன்பமே வீசாதோ இனி மேலே ( இசை ) 

Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1