enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  நல்ல இடம் நீ வந்த இடம் English | tamil | To Print
பாடல் தலைப்பு நல்ல இடம் நீ வந்த இடம்    திரைப்படம் கலாட்டா கல்யாணம் 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி ஜெயலலிதா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் P.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் வாலி  
இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்   ராகம்  
வெளியானஆண்டு 1968  தயாரிப்பு ராம்குமார் பிலிம்ஸ் 

இசை பல்லவி

ஆண் நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி ( இசை )

நல்ல இடம் நீ வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராணி
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண மலர் மேனி

இசை சரணம் - 1

பெண் எங்கே உன் ஜாடை விழும்
அங்கே என் ஆசை வரும்
அன்பே உன் பேர் எழுதும்
கண் பார்வை நாள் முழுதும்

நல்ல இடம் நான் வந்த இடம்
வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்
பெற வேண்டும் வண்ண புது ரோஜா

இசை சரணம் - 2

ஆண் நித்திரை ஓடிட முத்திரை வாங்கிட
பத்தரை மாற்றுத் தங்கம்
குங்குமம் நெஞ்சினில் சங்கமமாகிட
பொங்கிடும் வெள்ளம் எங்கும்

பெண் மல்லிகைப் பூவிலும் மெல்லியதாகிய
செவ்வண்ணக் கால்கள் பின்ன
நித்தமும் ஆடிட இத்தனை நாடக 
ஒத்திகை பார்ப்பதென்ன

ஆண் தழுவாதோ கைகள் தானாக 

பெண் உன்னால் கனிந்தேன் கனியாக

ஆண் நல்ல இடம் நீ வந்த இடம்

பெண் வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

ஆண் பெற வேண்டும் வண்ண புது ரோஜா

பெண் லலல லலலா... லா...  லலல லலலலா... லா...

இருவர் ஆஹஹாஹ ஹாஹஹஹா...
ஆஹஹாஹ ஹாஹஹஹா...

சரணம் - 3

ஆண் கட்டழகானது ஒட்டுறவாடிட
எண்ணங்கள் தேடிப் போகும்
சித்திரப் பூமகள் முத்தமளந்திட
எத்தனைக் காலம் ஆகும்

பெண் முத்து மொழிக் கிளி கொத்து மலர்க் கொடி
தித்தித்த வார்த்தை சொல்வாள்
வட்ட நிலா ஒளி பட்ட இடத்தினில் 
சந்திக்க வேண்டும் என்பாள்

ஆண் இதமான இன்பம் சேராதோ

பெண் இன்றே இதயம் குளிராதோ

ஆண் நல்ல இடம் நீ வந்த இடம்

பெண் வர வேண்டும் காதல் மகராஜா
இன்று முதல் இனிய சுகம்

ஆண் பெற வேண்டும் வண்ண புது ரோஜா


Uploaded By: gowri
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1