இசை பல்லவி
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா... வருவதை எதிர் கொள்ளடா
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா... வருவதை எதிர் கொள்ளடா
இசை சரணம் - 1
தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா நானும் உன் பழி கொண்டேனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா... வருவதை எதிர் கொள்ளடா
இசை சரணம் - 2
மன்னவர் பணியேற்கும் கண்ணனும் பணி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா மன்னித்து அருள்வாயடா கர்ணா... மன்னித்து அருள்வாயடா
இசை சரணம் - 3
செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா கர்ணா... வஞ்சகன் கண்ணனடா உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா கர்ணா... வருவதை எதிர் கொள்ளடா ( இசை )
Uploaded By: gowri Lakshmansruthi.com
|