enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஜெய ஜெய தேவி English | tamil | To Print
பாடல் தலைப்பு ஜெய ஜெய தேவி    ரக்‌ஷ ரக்‌ஷ ஜகன்மாதா 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் அனந்து / திப்பு / கார்த்திக்  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் சோமு & கஜா   பாடலாசிரியர்கள் கே.சோமு  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு ஹெச்.எம்.வி 

ஜெய ஜெய தேவி

இசை பல்லவி

குழு ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 
துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 
துர்கா தேவி சரணம்

பெண் துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை
தரிசனம் கண்டால் போதும்

துர்க்கை அம்மனை துதித்தால் என்றும்
துன்பம் பறந்தோடும்
தர்மம் காக்கும் தாயும் அவளை
தரிசனம் கண்டால் போதும்

கர்ம வினைகளும் ஓடும்
சர்வ மங்கலம் கூடும்

குழு ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 
துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 
துர்கா தேவி சரணம்

இசை சரணம் 1

பெண் பொற் கரங்கள் பதினெட்டும்
நம்மை சுற்றி வரும் பகை விரட்டும்
நெற்றியிலே குங்குமப் பொட்டும்
வெற்றி பாதையைக் காட்டும்
ஆயிரம் கரங்கள் உடையவளே
ஆதிசக்தி அவள் பெரியவளே
ஆயிரம் நாமங்கள் கொண்டவளே
தாய்போல் நம்மைக் காப்பவளே

குழு ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 
துர்கா தேவி சரணம்
ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 
துர்கா தேவி சரணம்

இசை சரணம் - 2

பெண் சங்கு சக்கரம் வில்லும் அம்பும்
மின்னும் வாளும் வேலுடன் சூலமும்
தங்கக் கைகளில் தாங்கி நிற்பாள் அம்மாதான்
தங்கக் கைகளில் தாங்கி நிற்பாள்
சிங்கத்தின் மேல் அவள் வீற்றிருப்பாள்
திங்களை முடி மேல் சூடி நின்றாள்
மங்கல வாழ்வும் தந்திடுவாள்
மங்கையர்க்கரசியும் அவளே
அங்கயற்கன்னியும் அவளே

குழு ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 
துர்கா தேவி சரணம்

பெண் ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி 
துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்
கனக துர்கா தேவி சரணம்


Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1