enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  வரதப்பா வரதப்பா English | tamil | To Print
பாடல் தலைப்பு வரதப்பா வரதப்பா    திரைப்படம் பாபு 
கதாநாயகன் சிவாஜி கணேசன்  கதாநாயகி சௌகார் ஜானகி 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர் ஏ. சி. திருலோகசந்தர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

ஆண் வரதப்பா வரதப்பா 
கஞ்சி வருதப்பா கஞ்சி வருதப்பா

குழு எங்கேப்பா...

இசை பல்லவி

ஆண் வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

குழு அய்... ஆ அய்... அய் அய் அய்சலக்கா
அய் அய் அகரிபச்சா
ஆண் வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

இசை சரணம் - 1

ஆண் நகையும் நட்டும் போட்டிருந்தா 
சொர்ண லட்சுமி
நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரித் தந்தா
தான்ய லட்சுமி

குழு டாண்ட டண்டட டண்டா டண்டட டண்டா 
டாண்டாண்டாண்டா

ஆண் நகையும் நட்டும் போட்டிருந்தா 
சொர்ண லட்சுமி
நமக்கு நஞ்சையும் புஞ்சையும் வாரித் தந்தா
தான்ய லட்சுமி
மானங்காக்க துணிஞ்சு நின்னா வீர லட்சுமி
மானங்காக்க துணிஞ்சு நின்னா  வீர லட்சுமி
  எதிலும் மனசு வச்சு ஜெயிச்சு வந்தா
விஜய லட்சுமி 

எத்தனை லட்சுமி பாருங்கடா... 
இவ என்ன லட்சுமி கூறுங்கடா... ( இசை )

எத்தனை லட்சுமி பாருங்கடா... 
இவ என்ன லட்சுமி கூறுங்கடா... 
நம்ம அத்தனை பேருக்கும் படியளக்கும் 
அன்ன லட்சுமி ஆகுமடா

குழு ஆமா அன்ன லட்சுமி ஆகுமடா

ஆண் வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

இசை சரணம் - 2

குழு அய்... ஆ அய்... அய் அய் அய்சலக்கா
அய் அய் அகரிபச்சா

ஆண் தண்டைச் சத்தம் கலகலன்னு 
முன்னால் வருகுது
வாழைத் தண்டு போல கால் நடந்து 
பின்னால் வருகுது 

குழு டாண்ட டண்டட டண்டா டண்டட டண்டா 
டாண்டாண்டாண்டா

ஆண் பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது
பாக்குறப்போ பசி மயக்கம் தன்னால் வருகுது
பேச்சைக் கேக்கிறப்போ வந்த மயக்கம்
தானாக் குறையுது 

சாதம் போல சிரிக்கிறா... 
மீன் கொழம்பு போல மணக்குறா...
ரகசியமா ஏதும் சொன்னா 
ரசத்தைப் போல கொதிக்கிறா

குழு ஆஹா ரசத்தைப் போல கொதிக்கிறா
ஆண் வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா 

இசை சரணம் - 3

ஆண் குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது 
அது அனுமந்த ராவ்... ஆ...
அனுமந்த ராவ் அவியலிலே கலந்திருக்குது ( இசை )

மேரியம்மா கேரியரில் எரா இருக்குது
மேரியம்மா கேரியரில் எரா இருக்குது
அது பத்மநாப அய்யர் வீட்டு
குழம்பில் கெடக்குது

சமையலெல்லாம் கலக்குது... 
அது சமத்துவத்த வளர்க்குது...
ஜாதி சமய பேதமெல்லாம் 
சோத்தக் கண்டா பறக்குது

குழு ஆஹா சோத்தக் கண்டா பறக்குது
வரதப்பா வரதப்பா கஞ்சி வருதப்பா 
கஞ்சி கலயம் தன்னை தலையில் தாங்கி 
வஞ்சி வருதப்பா ( இசை )

அய்... ஆ அய்... அய் அய் அய்சலக்கா
அய் அய் அகரிபச்சா
அய் அய் அய்சலக்கா அய் அய் அகரிபச்சா
அய்சலக்கா அகரிபச்சா அய்சலக்கா அகரிபச்சா 
அய்சலக்கா அகரிபச்சா அய்சலக்கா அகரிபச்சா 
ஹே...


Uploaded By: aish
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1