enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஐந்து கடமைகள் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஐந்து கடமைகள்  Movie Name   
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் நாகூர் இ.எம்.ஹனீஃபா  பாடகிகள்  
இசையமைப்பாளர் பி.ஆர்.ரெஜின்   பாடலாசிரியர்கள்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  
    இசை        பல்லவி

    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள் (இசை)
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள் (இசை)
   
    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    இசை        சரணம் - 1
   
    வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி
    இத்தரையோர்க் குரைத்த போதம்
    வித்தகன் அல்லாவின் உத்தம தூதர் நபி
    இத்தரையோர்க் குரைத்த போதம்
    சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
    சொத்தாக கிடைத்திட்ட வேதம்
    சத்திய இஸ்லாத்தின் முத்தான கொள்கையின்
    சொத்தாக கிடைத்திட்ட வேதம்

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    இசை        சரணம் - 2

    கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
    கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
    கலிமா தொழுகையுடன் கவின் மிகு நோன்பிருந்து
    கனிவுடன் ஜக்காத்தைக் கொடுத்து
    நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்
    ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து
    நலமுடன் உடலும் பொருளும் இருந்தால்
    ஹஜ்ஜை முடிக்கணும் அடுத்து

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    இசை        சரணம் - 3

    இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
    மறையாய் கொண்டது இஸ்லாம்
    இறைவன் ஒருவன் என்ற இனிய கொள்கையை
    மறையாய் கொண்டது இஸ்லாம்
    முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட
    நெறியாய் திகழ்வது இஸ்லாம்
    முறையாய் மனிதர்களை ஓர் குலமாக்கிட
    நெறியாய் திகழ்வது இஸ்லாம்

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    இசை        சரணம் - 4

    உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
    கண்ணியம் காத்திடும் மார்கம்
    உள்ளத்தில் ஒளி ஊட்டி உணர்வில் அருள் கூட்டி
    கண்ணியம் காத்திடும் மார்கம்
    மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
    புண்ணிய வழி சொல்லும் மார்கம்
    மன்னர் முஹம்மதை ஜன்னத்தில் காண்பதற்க்கு
    புண்ணிய வழி சொல்லும் மார்கம்

    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள் 
    ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்
    அத்தனையும் சொர்கத்தின்
    சங்கை மிகு முத்திரைகள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்
    தீனோரே கேளுங்கள் திருமறை வழி வாருங்கள்

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1