enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  உச்சி வகிந்தெடித்து English | tamil | To Print
பாடல் தலைப்பு உச்சி வகிந்தெடித்து    திரைப்படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி 
கதாநாயகன் சிவகுமார்  கதாநாயகி தீபா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் இளையராஜா   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் தேவராஜ் மோகன்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு  

                 ஆரம்ப இசை                   பல்லவி

ஆண்      :  உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
                 பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
                 மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

ஆண்       :  உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
                  பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
                  மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

பெண்குழு
:  ஏ.... ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரிராரோ
                  ஆரிராரோ ஆரிராரோ
                  ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ

  (இசை)                         சரணம் - 1

ஆண்        :  பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா
                   பால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க
                   சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல
                   அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல...

ஆண்        :  உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
                   பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

  (இசை)                         சரணம் - 2

ஆண்        :  வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ
                   கட்டெறும்பு மொச்சதுனு சொன்னாங்க
                   கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை
                   அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல...

ஆண்        :  உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
                   பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க

ஆண்        :  ஆ...ரா ர ரா ர ரே ராரே...தன னனா...ஹே...னன னன..ஹே...


  (இசை)                         சரணம் - 3


ஆண்        :  பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு
                   செங்கரையான் தின்னதுன்னு சொன்னாங்க
                   செங்கரையான் தின்னிருக்க நியாயமில்ல
                   அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல

ஆண்        :  உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
                   பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
                   மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா

ஆண்
        :  உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி
                   பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
                   மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1