enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  கண்ணீரில் மூழ்கும் English | tamil | To Print
பாடல் தலைப்பு கண்ணீரில் மூழ்கும்    திரைப்படம் மைதிலி என்னைக் காதலி 
கதாநாயகன் டி.ராஜேந்தர்  கதாநாயகி அமலா 
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள் எஸ்.ஜானகி 
இசையமைப்பாளர் டி.ராஜேந்தர்   பாடலாசிரியர்கள் டி.ராஜேந்தர்  
இயக்குநர் டி.ராஜேந்தர்   ராகம்  
வெளியானஆண்டு 1986  தயாரிப்பு  

 

      ஆரம்ப இசை                   பல்லவி

பெண்     :  கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
                  கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
                  கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
                  கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே
                  என்னை நீ வெறுத்தால்
                  என்னாகும் என்று
                  நினைத்து தான் பாரு
                  நெஞ்சத்தை கேளு
                  முள்ளில் ஆடும் பறவை நான் தானே
                   பறவை நானே...

                  கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே
                  கரை சேர்க்க வேண்டும் என்பேன் நீயே

      (இசை)                          சரணம் - 1

ஆண்      :  ஆ..ஆ.ஆ...அமாவாசை இரவினிலே
                  நிலவது உதிப்பதில்லை
                  அழகற்ற என் முகத்தை
                  அன்றொருத்தி ஏற்கவில்லை

பெண்     :  அழகை வைத்து காதலிக்க
                 அவளை போல பலர் உண்டு
                 அன்பை வைத்து காதலிக்க
                 என்னை போல சிலர் உண்டு

ஆண்      :  பாலைவனத்தில் சோலை எதற்கு

பெண்     :  காளை மனதில் சோகம் எதற்கு

ஆண்      :  திரிந்திட்ட பால் குடத்தில்
                  வெண்ணை அதை தேடாதே

பெண்     :  ஒரு தலை ராகத்திலே
                  காலந்தன்னை கழிக்காதே

ஆண்      :  அழகிய மயிலே என்னை நெருங்காதே
                  நெருங்காதே...

                  உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
                  உன் வானம் அழைப்பது வீணே

      (இசை)                          சரணம் - 2

ஆண்     :  காம்பை விட்டு பூ உதிர்ந்தால்
                 மீண்டும் அங்கே பூப்பதில்லை
                 காதலித்து தோல்வியென்றால்
                 மீண்டும் அங்கே காதல் இல்லை

பெண்     :  காளை உன்னை காம்பு என்றால்
                  பெண்ணவளை பூ என்பேன்
                  காம்பில் அவள் பூக்கவில்லை
                  காதல் அவள் ஏற்கவில்லை

ஆண்      :  நினைத்தது நான் நினைத்தது தான்

பெண்     :  மறந்து விட்டால் மாற்றம் வரும்

ஆண்      :  நினைத்ததை மறப்பதற்கு
                  நெஞ்சத்துக்கு தெரியாதே

பெண்     :  கண்களை மூடிக்கொண்டு
                  இருட்டென்று சொல்லாதே
                 முள்ளில் ஆடும் பறவை நான் தானே
                  பறவை நானே

ஆண்      :  உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
                  உன் வானம் அழைப்பது வீணே
                  தரை மீது ஓடம் ஓடாது மானே
                  நதி மீது தேரும் போகாது தேனே
                  மானே தேனே என்னை நெருங்காதே
                  நெருங்காதே...

                  உதிர்ந்திட்ட நட்சத்திரம் நானே
                  உன் வானம் அழைப்பது வீணே


Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1