enlish | தமிழ்
முகப்பு | பாடல் பட்டியல் | திரைப்படங்கள் | பக்தி இசை | | தமிழ் இசை | கிராமிய இசை | கர்நாடக இசை | மேற்கத்திய இசை | தனித் தொகுப்புகள் | பிற மொழிகள்
nav_arrow இசையமைப்பாளர்கள்
nav_arrow பாடலாசிரியர்கள்
nav_arrow பாடகர்கள்
nav_arrow பாடகிகள்
nav_arrow கதாநாயகன்
nav_arrow திருமண பாடல்கள்
nav_arrow கதாநாயகி
nav_arrow வெளியானஆண்டு
nav_arrow ராகம்
nav_arrow தாளம் ஆங்கிலத்தில்
nav_arrow தாளம் தமிழில்
nav_arrow ஸ்ருதி ஆங்கிலத்தில்
nav_arrow ஸ்ருதி தமிழில்
nav_arrow இசைப் பிரிவு
nav_arrow பாடல் ரகம்
nav_arrow பாடல் தலைப்பு
nav_arrow பாடல் சூழ்நிலை
nav_arrow பாடல் ஆசிரியர்கள்
nav_arrow சிறப்பு பக்கம்
arrow  ஆயர் பாடி மாளிகையில் English | tamil | To Print
பாடல் தலைப்பு ஆயர் பாடி மாளிகையில்    ஸ்ரீ கிருஷ்ண கானம் 
கதாநாயகன் கௌரவ்  கதாநாயகி  
பாடகர்கள் ௭ஸ்.பி.பாலசுப்பிரமணியம்  பாடகிகள்  
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் கண்ணதாசன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு   தயாரிப்பு எச்.எம்.வி 
    ஆயர்பாடி மாளிகையில்
    
    இசை        பல்லவி
    
    ஆயர்பாடி மாளிகையில்
    தாய் மடியில் கன்றினைப் போல்
    மாயக் கண்ணன் தூங்குகின்றான்
    தாலேலோ ( இசை )
    
    ஆயர்பாடி மாளிகையில்
    தாய் மடியில் கன்றினைப் போல்
    மாயக் கண்ணன் தூங்குகின்றான்
    தாலேலோ
    
    அவன் வாய் நிறைய மண்ணை உண்டு
    மண்டலத்தைக் காட்டிய பின்
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
    ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
    
    ஆயர்பாடி மாளிகையில்
    தாய் மடியில் கன்றினைப் போல்
    மாயக் கண்ணன் தூங்குகின்றான்
    தாலேலோ
    
    இசை        சரணம் 1    
    
    பின்னலிட்ட கோபியரின்
    கன்னத்திலே கன்னமிட்டு
    மன்னவன் போல்
    லீலை செய்தான் தாலேலோ
    பின்னலிட்ட கோபியரின்
    கன்னத்திலே கன்னமிட்டு
    மன்னவன் போல்
    லீலை செய்தான் தாலேலோ
    அந்த மந்திரத்தில் அவர் உறங்க
    மயக்கத்திலே இவனுறங்க
    மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
    மண்டலமே உறங்குதம்மா ஆராரோ
    
    ஆயர்பாடி மாளிகையில்
    தாய் மடியில் கன்றினைப் போல்
    மாயக் கண்ணன் தூங்குகின்றான்
    தாலேலோ
    
    இசை        சரணம் 2   
    
    நாகப் படம் மீதில்
    அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான்
    தாலேலோ
    நாகப் படம் மீதில்
    அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
    தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான்
    தாலேலோ
    அவன் மோக நிலை கூட
    ஒரு யோக நிலை போலிருக்கும்
    யாரவனைத் தூங்க விட்டார் ஆராரோ
    யாரவனைத் தூங்க விட்டார் ஆராரோ
    
    ஆயர்பாடி மாளிகையில்
    தாய் மடியில் கன்றினைப் போல்
    மாயக் கண்ணன் தூங்குகின்றான்
    தாலேலோ
    
    இசை        சரணம் 3   
    
    கண்ணனவன் தூங்கி விட்டால்
    காசினியே தூங்கி விடும்
    அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
    கண்ணனவன் தூங்கி விட்டால்
    காசினியே தூங்கி விடும்
    அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ
    அவன் பொன்னழகை பார்ப்பதற்கும்
    போதை முத்தம் பெறுவதற்கும்
    கன்னியரே கோபியரே வாரீரோ
    கன்னியரே கோபியரே வாரீரோ
    
    ஆயர்பாடி மாளிகையில்
    தாய் மடியில் கன்றினைப் போல்
    மாயக் கண்ணன் தூங்குகின்றான்
    தாலேலோ
    மாயக் கண்ணன் தூங்குகின்றான்
    தாலேலோ

Uploaded By:
Lakshmansruthi.com
arrow_back   
 
1
1
1
1
1